Tag: விளையாட்டு

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள் - " விளையாட்டுகள், உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் காரணி". பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ப்ரைட் ஸ்டார் போர்பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படை பயிற்சி, பிரைட்-ஸ்டார், 21 நாள் பலதரப்பு போர் ஒத்திகை, எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமான தளத்தில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அமெரிக்கா  சவுதி அரேபியா கிரீஸ் கத்தார் எகிப்து (நடத்தும் நாடு) இந்தியா குறிப்பு இந்திய விமானப்படை (IAF) ஐந்து MiG-29 போர் விமானங்கள், ஆறு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அதன் சிறப்புப் படை வீரர்களின் குழுவை அனுப்பியுள்ளது. IAF இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். எகிப்து பற்றி அதிபர் - அப்தெல் ஃபத்தா எல்-சிசி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட் சிறந்த நபர்கள் என்.டி. ராமராவ் நினைவு நாணயம்  முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் ₹100 நினைவு நாணயம் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டது. என்.டி.ராமராவ் பற்றி இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். (1983-84; 1984-89; 1994-95) 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) நிறுவினார். விருதுகள் மற்றும் கௌரவம் பத்மஸ்ரீ – 1968 என்டிஆர் தேசிய விருது என்டிஆர் -ஐ கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய விருது. ஆந்திரப் பிரதேச அரசால் 1996 இல் நிறுவப்பட்டது. வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்தியத் திரைப்படத் துறைக்கு செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளை அங்கீகரிப்பது. விளையாட்டு BWF உலக சாம்பியன்ஷிப் BWF உலக சாம்பியன்ஷிப் 2023 டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் நடைபெற்றது. நட்சத்திர இந்திய வீரர் HS பிரணாய் தனது முதல் BWF உலக சாம்பியன்ஷிப் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றார். நியமனங்கள் பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக ஒரு பெண் இருப்பது இதுவே முதல் முறை. 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி. குறிப்பு Charge d'affaires என்பது தூதுர் அல்லது உயர் ஆணையர் இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் தூதரக பணிக்கு தற்காலிகமாக தலைமை தாங்கும் அதிகாரி குறிக்கும். வெளியுறவு திட்டங்கள் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே - உயர் ஆணையங்கள் காமன்வெல்த் அல்லாத நாடுகளுக்கு இடையே - தூதரகங்கள் ஆகஸ்ட் 2019, பிரிவு 370 ரத்தானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உயர் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது. பாகிஸ்தான் பற்றி அதிபர் -…

வரலாறு

விளையாட்டு உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்டில் நிறைவடைந்தது.  இந்தியா ஒரு தங்கப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் 18வது இடத்தைப் பிடித்தது. நீரஜ் சோப்ரா இந்தியாவின் ஒரே பதக்கத்தை வென்றார் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம். 2003ஆம் ஆண்டு பாரிஸில் அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதல் வெண்கலம் மற்றும் 2022ஆம் ஆண்டு ஓரிகானில் நீரஜ் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா பெற்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். குறிப்பு: இந்திய ஆடவர் 4x400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்திய அணியும் ஆசிய சாதனை படைத்தது. பெண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் போட்டியில் பாருல் சவுத்ரி தேசிய சாதனையை முறியடித்து 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

வரலாறு

விளையாட்டு IBSA உலக விளையாட்டுப் போட்டி 2023 IBSA (International Blind Sports Federation) உலக விளையாட்டுப்போட்டி 2023 இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றது. பார்வைக் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களின் உலகின் மாபெரும் சந்திப்பு. இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய ஆண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. குறிப்பு IBSA உலக விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பார்வையற்றோர் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ புத்தகம் வெளியீடு ஜூன் 2020 முதல் மே 2022 வரை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் மற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய இரண்டு தொகுதி புத்தகம் போபாலில் வெளியிடப்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வெளியீடு பிரிவால் தொகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (I&B) - அனுராக் தாக்கூர். நியமனங்கள் காசிரங்கா தேசிய பூங்காவின் முதல் பெண் கள இயக்குனர் அசாம் அரசின் இந்திய வன சேவை அதிகாரி சோனாலி கோஷ் பூங்காவின் அடுத்த கள இயக்குநராக நியமிக்கப்பட்டார். காசிரங்கா தேசியப் பூங்காவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. காசிரங்கா தேசிய பூங்கா பற்றி அமைவிடம் – அசாம் நிறுவப்பட்டது – 1904 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் - 1985 இந்த பூங்காவில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்திய காண்டாமிருகங்கள் உள்ளன.

வரலாறு

முக்கிய தினங்கள் உலக தொழில்முனைவோர் தினம் – ஆகஸ்ட் 21 தங்கள் வணிகங்களின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சவால்களை சந்திப்பவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது. உலக மூத்த குடிமக்கள் தினம் - ஆகஸ்ட் 21 2023 கருப்பொருள் - "மாறும் உலகில் முதியோர்களின் பின்னடைவு". பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் 2023 கருப்பொருள் - "பாரம்பரியம்: நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குதல்". விளையாட்டு பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக ஸ்பெயின் சாம்பியன் ஆனது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்றது.

வரலாறு

விளையாட்டு உலக துப்பாக்கி சுடுதல் அஸர்பைஜானில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் சிவா நர்வால், ஈஷா சிங் கூட்டணி இறுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தது. உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்  ஜோர்டானில் நடைபெறும் உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்கால் 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். உலக சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து இருமுறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 62 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் சவிதா நுட்பமான தாக்குதல் முன்னிலை அடிப்படையில் வெனிசூலாவின் பாவ்லா மான்டெரோவை சாய்த்து தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் ஆனார்.  போட்டியில் மொத்தமாக இந்தியா, 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்றது. குறிப்பு கடந்த எடிஷனில் அன்டிம் பங்கால் தங்கம் வென்றதன் மூலம், உலக ஜூனியர்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

சிறந்த நபர்கள் மதுரையில் டி.எம்.சௌந்தரராஜன் சிலை மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு அரசு சார்பில் மதுரையில் அமைக்கப்பட்ட முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குறிப்பு கலைமாமணி, பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த நூற்றாண்டையொட்டி, அவரது சொந்த ஊரான மதுரையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு ஜுனியர் மல்யுத்தம்: அமித் குமார் “யு20“ உலக சாம்பியன் ஜோர்டானில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமித் குமார் தங்கம் வென்று சாம்பியன் ஆனாார். குறிப்பு முன்னதாக பல்வீந்தர் சீமா, ரமேஷ் குமார் (2001), தீபக் புனியா (2019) ஆகியோர் ஜுனியர் சாம்பியன் ஆன நிலையில், அந்தப் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் ஆகியிருக்கிறார் அமித் குமார். சென்னையில் முதல்முறையாக இரவு நேர மோட்டார் பந்தயம் இந்தியாவிலேயே முதல் முறையாக, இரவு நேர மோட்டார் பந்தயம் வரும் டிசம்பர் சென்னையில் நடைபெறவுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய மோட்டார் விளையாட்டுகள் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ்(பி)லிட். ஆகியவை இணைந்து சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளன. சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கி.மீ தொலைவுக்கு இரவு நேர பந்தயமாக(ஸ்ட்ரீட் சர்க்யுட்) நடத்தப்படுகிறது. இரவு நேர பந்தயம் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பு எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் என்பது எஃப்ஐஏ சான்றளிக்கப்பட்ட பந்தயம் ஆகும். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தய இலச்சினையையும் அவர் அறிமுகம் செய்தார்.

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய மீன் விவசாயிகள் தினம் – ஜுலை 10 இது மீன் வளர்ப்பாளர்களின் மகத்தான பங்களிப்பையும் நிலையான மீன்வளர்ப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பு இந்தியாவின் மீன்வளத் துறையின் சாதனைகளை நினைவுகூரும் வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் ”கோடைமாநாடு 2023” மற்றும் ”ஸ்டார்ட் அப் மாநாடு” ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக மக்கள் தொகை தினம் – ஜுலை 11 2023 கருப்பொருள் – ”பாலின சமத்துவத்தின் சக்தியை கட்டவிழ்த்து விடுதல் : நமது உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளைத் திறக்க பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்கள் உயர்வதை உறுதி செய்தல்”. விளையாட்டு லக்ஷ்யா சென் சாம்பியன் கனடா ஒபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அவர் 21-18, 22-20 என்ற கேம்களில் சீனாவின் லீ ஷி ஃபெங்கை சாய்த்தார். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற பிறகு, லக்ஷ்யா சாம்பியனாகும் முதல் போட்டி இதுவாகும்.

வரலாறு

முக்கிய தினங்கள் உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜுலை 6 இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலக்கியல் நோய்களைப் பற்றி கல்வி கற்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது. 2023 கருப்பொருள் – ஒரு உலகம், ஒரே சுகாதாரம் : விலங்கு வழி நோய்களை தடுக்கவும், பரவுவதை நிறத்தவும். பின்னணி 1885 ஆம் அண்டு இதே நாளில், பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஒரு விலங்கியல் நோயாகும். ஜுலை 6, 2007 அன்று, லூயிஸ் பாஸ்டர் மறைந்த 100வது ஆண்டு நினைவு நாளில், விலங்கியல் நோய்கள் பற்றிய ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் நோய்கள் விலங்கு வழி நோய் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும். விலங்கியல் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான புரத துகள்களை உள்ளடக்கியிருக்கலாம். நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம். இந்தியாவில் விலங்கியல் நோய்கள் உலகின் காடுகளின் நிலை 2022 இன் சமீபத்திய அறிக்கை, விலங்கியல் வைரஸ் நோய்களுக்கான சாத்தியமான அபாய பகுதி என இந்தியாவை கணித்துள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் ரேபிஸ், பன்றிக் காய்ச்சல், நிபா, புருசெல்சோசிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், போர்சின் சிஸ்டிசெர்கோசிஸ், காலா அசார் (கருப்புக் காய்ச்சல்) மற்றும் ஜிகா போன்ற வளர்ந்து வரும் அனைத்து நோய்களும் சுமார் 70% விலங்கு வழி பரவும் இயல்புடையவை. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் உயர் கடல் ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர் (BBNJ) அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தை UN ஏற்றுக்கொண்டது. 1994 மற்றும் 1995 ஒப்பந்தங்களுக்குப் பிறகு, UNCLOS இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இதுவாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையம் மற்றும் மீன் பங்கு ஒப்பந்தத்தை நிறுவியது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்களில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் பல்லுயிர் பெருக்கத்தின் அதிகப்படியான சுரண்டல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலோர மாசுபாடு மற்றும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நீடிக்க முடியாத நடைமுறைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு வில் வித்தை : இந்தியாவுக்கு 2 தங்கம் அயர்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் ஜுனியர் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல் ஐஸ்வர்யா சர்மா/அதிதி சுவாமி/ஏக்தா…

வரலாறு

புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பிற்காக 4 அம்பேத்கர் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு, அரசியலமைப்பின் தந்தை பி.ர். அம்பேத்கரின் நான்கு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட அடையாளம் கண்டுள்ளது. இதன் முதல் கட்டத்தில் சாதி ஒழிப்பு, இந்து மதத்தில் புதிர்கள், இந்து மதத்தின் தத்துவம் மற்றும் சூத்திரர்கள் யார்? ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விமர்சனப் பதிப்பாக வெளியிடுகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சாதி ஒழிப்பு மற்றும் இந்து மதத்தின் தத்துவம் ஆகிய இரண்டு படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் வரைவுகள் தயாரிக்கப்பட்டு வெளியிடும் முனைப்பில் குழு உள்ளது. குறிப்பு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைக் கழகத்தின் (TNTB & ESC) தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கண்டறிந்து ஆங்கிலம் மற்றும் பிற திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில், ‘திசைத்தோறும் திராவிடம்’வேகமெடுத்துள்ளது. திசைத்தோறும் திராவிடம் என்பது தமிழ் இலக்கியப் படைப்புகளை பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும். இது தமிழ் தொன்மை, பாரம்பரியம் மற்றும் சமகாலத்தை வெளிபடுத்தி உலக இலக்கியத்தை வளப்படுத்துகிறது.  மற்ற மூன்று திராவிட மொழிகளின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான திட்டங்களும் உள்ளன. TNTB & ESC-இன் மற்ற இரு திட்டங்கள்: ”முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம்” (MAMT) - தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக. ”இளந்தளிர் இலக்கியத் திட்டம்”- வெவ்வேறு வயதினராக வகைப்படுத்தப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கில். விளையாட்டு தடகள வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக தமிழ்நாட்டின் செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்யப்பட்டார்.

வரலாறு

விளையாட்டு அல்பேனியாவின் டுரெஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பின் (IWF) உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர்  பாரலி பெதார்பிரேட் 67 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். நியமனங்கள் பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) புதிய தலைவராக பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் தில்மா வானா ரூசெஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். NDB, BRICS வங்கி என்றும் அழைக்கப்படுகிறது, இது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஐந்து BRICS நாடுகளால் அமைக்கப்பட்ட பலதரப்பு நிதி நிறுவனமாகும். BRICS பற்றி: BRICS என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய உலகின் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் தொகுப்பின் சுருக்கமாகும். முதல் நான்கு நாடுகள்   2001 இல் "BRIC"  என தொகுக்கப்பட்டன. தென்னாப்பிரிக்கா 2010 இல் சேர்க்கப்பட்டது. புதிய வளர்ச்சி  வங்கி (NDB) நிறுவப்பட்டது: 15 ஜூலை 2014 புதிய வளர்ச்சி வங்கி (NDB) தலைமையகம்: ஷாங்காய், சீனா