Tag: புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்

வரலாறு

விளையாட்டு IBSA உலக விளையாட்டுப் போட்டி 2023 IBSA (International Blind Sports Federation) உலக விளையாட்டுப்போட்டி 2023 இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றது. பார்வைக் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களின் உலகின் மாபெரும் சந்திப்பு. இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய ஆண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. குறிப்பு IBSA உலக விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பார்வையற்றோர் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ புத்தகம் வெளியீடு ஜூன் 2020 முதல் மே 2022 வரை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் மற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய இரண்டு தொகுதி புத்தகம் போபாலில் வெளியிடப்பட்டது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வெளியீடு பிரிவால் தொகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (I&B) - அனுராக் தாக்கூர். நியமனங்கள் காசிரங்கா தேசிய பூங்காவின் முதல் பெண் கள இயக்குனர் அசாம் அரசின் இந்திய வன சேவை அதிகாரி சோனாலி கோஷ் பூங்காவின் அடுத்த கள இயக்குநராக நியமிக்கப்பட்டார். காசிரங்கா தேசியப் பூங்காவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. காசிரங்கா தேசிய பூங்கா பற்றி அமைவிடம் – அசாம் நிறுவப்பட்டது – 1904 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் - 1985 இந்த பூங்காவில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்திய காண்டாமிருகங்கள் உள்ளன.

வரலாறு

முக்கிய தினங்கள் கார்கில் விஜய் திவாஸ் - ஜூலை 26 ஆபரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பெருமையையும் வீரத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ஆயுதப்படையின் வெற்றியை இந்தநாள் நினைவுகூறுகிறது. விளையாட்டு ஒலிம்பிக் தீபம் அறிமுகம் 2004 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் தீபத்தை எந்திச் செல்வதற்கான 'டார்ச் அறிமுகம் செய்யப்பட்டது. வெள்ளி நிறத்திலான இந்த டார்ச்சின் எடை 1.5 கிலோ கிராம். உயரம்70 சென்டிமீட்டர். போட்டிக்காக 2,000 டார்ச்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்ட உருக்கில் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸை சேர்ந்த மேத்யூ லெஹானியுர் இந்த டார்ச்சை வடிவமைத்திருக்கிறார். ஒலிம்பிக், பாராலிம்பிக் என இரு போட்டிகளிலுமே இந்த டார்ச் பயன்படுத்தப்படும். புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் கருணாநிதி சாகித்திய அகாதெமி நூல் சாகித்திய அகாதெமியின் வெளியீடான, “இந்திய இலக்கியச் சிற்பிகள்-கலைஞர் மு.கருணாநிதி“ நூல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.  இதை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் நேரில் அளித்தார்.

வரலாறு

புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பிற்காக 4 அம்பேத்கர் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு, அரசியலமைப்பின் தந்தை பி.ர். அம்பேத்கரின் நான்கு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட அடையாளம் கண்டுள்ளது. இதன் முதல் கட்டத்தில் சாதி ஒழிப்பு, இந்து மதத்தில் புதிர்கள், இந்து மதத்தின் தத்துவம் மற்றும் சூத்திரர்கள் யார்? ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விமர்சனப் பதிப்பாக வெளியிடுகிறது. டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சாதி ஒழிப்பு மற்றும் இந்து மதத்தின் தத்துவம் ஆகிய இரண்டு படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் வரைவுகள் தயாரிக்கப்பட்டு வெளியிடும் முனைப்பில் குழு உள்ளது. குறிப்பு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைக் கழகத்தின் (TNTB & ESC) தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கண்டறிந்து ஆங்கிலம் மற்றும் பிற திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில், ‘திசைத்தோறும் திராவிடம்’வேகமெடுத்துள்ளது. திசைத்தோறும் திராவிடம் என்பது தமிழ் இலக்கியப் படைப்புகளை பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும். இது தமிழ் தொன்மை, பாரம்பரியம் மற்றும் சமகாலத்தை வெளிபடுத்தி உலக இலக்கியத்தை வளப்படுத்துகிறது.  மற்ற மூன்று திராவிட மொழிகளின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான திட்டங்களும் உள்ளன. TNTB & ESC-இன் மற்ற இரு திட்டங்கள்: ”முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம்” (MAMT) - தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக. ”இளந்தளிர் இலக்கியத் திட்டம்”- வெவ்வேறு வயதினராக வகைப்படுத்தப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கில். விளையாட்டு தடகள வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக தமிழ்நாட்டின் செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்யப்பட்டார்.