Tag: சிறந்த நபர்கள்

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள் - " விளையாட்டுகள், உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் காரணி". பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ப்ரைட் ஸ்டார் போர்பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படை பயிற்சி, பிரைட்-ஸ்டார், 21 நாள் பலதரப்பு போர் ஒத்திகை, எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமான தளத்தில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அமெரிக்கா  சவுதி அரேபியா கிரீஸ் கத்தார் எகிப்து (நடத்தும் நாடு) இந்தியா குறிப்பு இந்திய விமானப்படை (IAF) ஐந்து MiG-29 போர் விமானங்கள், ஆறு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அதன் சிறப்புப் படை வீரர்களின் குழுவை அனுப்பியுள்ளது. IAF இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். எகிப்து பற்றி அதிபர் - அப்தெல் ஃபத்தா எல்-சிசி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட் சிறந்த நபர்கள் என்.டி. ராமராவ் நினைவு நாணயம்  முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் ₹100 நினைவு நாணயம் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டது. என்.டி.ராமராவ் பற்றி இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். (1983-84; 1984-89; 1994-95) 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) நிறுவினார். விருதுகள் மற்றும் கௌரவம் பத்மஸ்ரீ – 1968 என்டிஆர் தேசிய விருது என்டிஆர் -ஐ கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய விருது. ஆந்திரப் பிரதேச அரசால் 1996 இல் நிறுவப்பட்டது. வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்தியத் திரைப்படத் துறைக்கு செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளை அங்கீகரிப்பது. விளையாட்டு BWF உலக சாம்பியன்ஷிப் BWF உலக சாம்பியன்ஷிப் 2023 டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் நடைபெற்றது. நட்சத்திர இந்திய வீரர் HS பிரணாய் தனது முதல் BWF உலக சாம்பியன்ஷிப் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றார். நியமனங்கள் பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக ஒரு பெண் இருப்பது இதுவே முதல் முறை. 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி. குறிப்பு Charge d'affaires என்பது தூதுர் அல்லது உயர் ஆணையர் இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் தூதரக பணிக்கு தற்காலிகமாக தலைமை தாங்கும் அதிகாரி குறிக்கும். வெளியுறவு திட்டங்கள் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே - உயர் ஆணையங்கள் காமன்வெல்த் அல்லாத நாடுகளுக்கு இடையே - தூதரகங்கள் ஆகஸ்ட் 2019, பிரிவு 370 ரத்தானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உயர் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது. பாகிஸ்தான் பற்றி அதிபர் -…

வரலாறு

சிறந்த நபர்கள் மதுரையில் டி.எம்.சௌந்தரராஜன் சிலை மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு அரசு சார்பில் மதுரையில் அமைக்கப்பட்ட முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். குறிப்பு கலைமாமணி, பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த நூற்றாண்டையொட்டி, அவரது சொந்த ஊரான மதுரையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. விளையாட்டு ஜுனியர் மல்யுத்தம்: அமித் குமார் “யு20“ உலக சாம்பியன் ஜோர்டானில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமித் குமார் தங்கம் வென்று சாம்பியன் ஆனாார். குறிப்பு முன்னதாக பல்வீந்தர் சீமா, ரமேஷ் குமார் (2001), தீபக் புனியா (2019) ஆகியோர் ஜுனியர் சாம்பியன் ஆன நிலையில், அந்தப் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் ஆகியிருக்கிறார் அமித் குமார். சென்னையில் முதல்முறையாக இரவு நேர மோட்டார் பந்தயம் இந்தியாவிலேயே முதல் முறையாக, இரவு நேர மோட்டார் பந்தயம் வரும் டிசம்பர் சென்னையில் நடைபெறவுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இந்திய மோட்டார் விளையாட்டுகள் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ்(பி)லிட். ஆகியவை இணைந்து சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளன. சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கி.மீ தொலைவுக்கு இரவு நேர பந்தயமாக(ஸ்ட்ரீட் சர்க்யுட்) நடத்தப்படுகிறது. இரவு நேர பந்தயம் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பு எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் என்பது எஃப்ஐஏ சான்றளிக்கப்பட்ட பந்தயம் ஆகும். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தய இலச்சினையையும் அவர் அறிமுகம் செய்தார்.

வரலாறு

சிறந்த நபர்கள் பனகல் அரசர் வழி நடப்போம் நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பனகல் அரசரின் வழி நடப்போம், தமிழகத்தை முன்னேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்குபவர் பனகல் அரசர். அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சம்ஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற பரட்சிகரத்திட்டங்களை நிகழ்த்தி காட்டியவர் அவர். பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது. பனகல் ராஜா பற்றி பனகல் ராஜா என்று அழைக்கப்படும் ராஜா சர் பனகண்டி ராமராயனிங்கர், காளஹஸ்தியின் ஜமீன்தாராக இருந்தார். திராவிட அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். அவர் ஜனநாயகத்தின் முக்கிய தலைவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளிப்பதில் தீவிர ஆதரவாளராகவும் கருதப்பட்டார். பனகல் ராஜா 1921 முதல் 1926 வரை மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர் 1925 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 16, 1928 இல் இறக்கும் வரை நீதிக்கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.