வரலாறு

புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்

மொழிபெயர்ப்பிற்காக 4 அம்பேத்கர் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன

  • தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு, அரசியலமைப்பின் தந்தை பி.ர். அம்பேத்கரின் நான்கு படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வெளியிட அடையாளம் கண்டுள்ளது.
  • இதன் முதல் கட்டத்தில் சாதி ஒழிப்பு, இந்து மதத்தில் புதிர்கள், இந்து மதத்தின் தத்துவம் மற்றும் சூத்திரர்கள் யார்? ஆகிய புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து விமர்சனப் பதிப்பாக வெளியிடுகிறது.
  • டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் சாதி ஒழிப்பு மற்றும் இந்து மதத்தின் தத்துவம் ஆகிய இரண்டு படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் வரைவுகள் தயாரிக்கப்பட்டு வெளியிடும் முனைப்பில் குழு உள்ளது.

குறிப்பு

  • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைக் கழகத்தின் (TNTB & ESC) தமிழ் இலக்கியப் படைப்புகளைக் கண்டறிந்து ஆங்கிலம் மற்றும் பிற திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில், ‘திசைத்தோறும் திராவிடம்’வேகமெடுத்துள்ளது.
  • திசைத்தோறும் திராவிடம் என்பது தமிழ் இலக்கியப் படைப்புகளை பிற திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும்.
  • இது தமிழ் தொன்மை, பாரம்பரியம் மற்றும் சமகாலத்தை வெளிபடுத்தி உலக இலக்கியத்தை வளப்படுத்துகிறது. 
  • மற்ற மூன்று திராவிட மொழிகளின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான திட்டங்களும் உள்ளன.

TNTB & ESC-இன் மற்ற இரு திட்டங்கள்:

  • ”முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்பு திட்டம்” (MAMT) – தொழில்நுட்ப புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக.
  • ”இளந்தளிர் இலக்கியத் திட்டம்”– வெவ்வேறு வயதினராக வகைப்படுத்தப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கில்.

விளையாட்டு

தடகள வீரர் செல்வபிரபு திருமாறனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

  • ஆசியாவின் சிறந்த ஜுனியர் தடகள வீரராக தமிழ்நாட்டின் செல்வபிரபு திருமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர்

  • இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்யப்பட்டார்.
Next வரலாறு விளையாட்டு >

People also Read