வரலாறு

சிறந்த நபர்கள்

மதுரையில் டி.எம்.சௌந்தரராஜன் சிலை

  • மறைந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு அரசு சார்பில் மதுரையில் அமைக்கப்பட்ட முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

குறிப்பு

  • கலைமாமணி, பத்மஸ்ரீ உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜனின் பிறந்த நூற்றாண்டையொட்டி, அவரது சொந்த ஊரான மதுரையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

விளையாட்டு

ஜுனியர் மல்யுத்தம்: அமித் குமார் “யு20“ உலக சாம்பியன்

  • ஜோர்டானில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) உலக மல்யுத்த போட்டியில் இந்தியாவின் அமித் குமார் தங்கம் வென்று சாம்பியன் ஆனாார்.

குறிப்பு

  • முன்னதாக பல்வீந்தர் சீமா, ரமேஷ் குமார் (2001), தீபக் புனியா (2019) ஆகியோர் ஜுனியர் சாம்பியன் ஆன நிலையில், அந்தப் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் ஆகியிருக்கிறார் அமித் குமார்.

சென்னையில் முதல்முறையாக இரவு நேர மோட்டார் பந்தயம்

  • இந்தியாவிலேயே முதல் முறையாக, இரவு நேர மோட்டார் பந்தயம் வரும் டிசம்பர் சென்னையில் நடைபெறவுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
  • இந்திய மோட்டார் விளையாட்டுகள் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ்(பி)லிட். ஆகியவை இணைந்து சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளன.
  • சென்னை தீவுத் திடல் மைதானத்தில் 3.5 கி.மீ தொலைவுக்கு இரவு நேர பந்தயமாக(ஸ்ட்ரீட் சர்க்யுட்) நடத்தப்படுகிறது. இரவு நேர பந்தயம் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

குறிப்பு

  • எஃப்4 இந்தியன் சாம்பியன்ஷிப் என்பது எஃப்ஐஏ சான்றளிக்கப்பட்ட பந்தயம் ஆகும்.
  • சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் பந்தய இலச்சினையையும் அவர் அறிமுகம் செய்தார்.
Next வரலாறு >

People also Read