Tag: முக்கிய தினங்கள்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2023 – நவம்பர் 5 சுனாமி அறிவு மற்றும் விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நவம்பர் 5 ஆம் தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. கருத்துரு  2023: ஒரு நெகிழ்வான எதிர்காலத்திற்கான சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுதல் 26 டிசம்பர் 2004 அன்று இந்தியாவை சுனாமி தாக்கியது. உயிர்க்கோளக் காப்பகத்திற்கான சர்வதேச தினம் 2023  உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை மேம்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால்  (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் நவம்பர் 03 அன்று உயிர்க்கோளக் காப்பகத்திற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது. இது முதன்முதலில் 2022ல் அனுசரிக்கப்பட்டது. 2023க்கான கருப்பொருள்: "நிலையான நடைமுறைகளை மேம்படுத்துதல்" என்பதாகும். குறிப்பு இந்தியாவில் 18 அறிவிக்கப்பட்ட உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.

வரலாறு

முக்கிய தினங்கள்  தேசிய ஊட்டச்சத்து வாரம் (பாரத ஊட்டச்சத்து வாரம் என்றும் அழைக்கப்படுகிறது) தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை அனுசரிக்கப்படுகிறது குறிக்கோள் - மனித உடலுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கருத்துரு 2023 – “அனைவருக்கும் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு”. குறிப்பு இந்திய அரசு 1982 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை நடத்தி வருகிறது. பாதுகாப்பு INS மகேந்திரகிரி INS மகேந்திரகிரியை சுதேஷ் தன்கர் மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸில் நாட்டுக்கு அர்பணித்தார் . மகேந்திரகிரி என்பது ப்ராஜெக்ட் 17A போர்க் கப்பல்களின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் இறுதி மற்றும் 7வது போர் கப்பல் ஆகும். இது ஒடிசாவில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை உச்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது புராஜக்ட்  17 ஆல்பா பற்றி அறிமுகம் - 2019 அதிநவீன  வழிகாட்டுதல்-ஏவுகணை போர் கப்பல்களின் வரிசையை உருவாக்குதல் (மொத்தம் 7 கப்பல்கள்). இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டது மும்பை - மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மூலம் நான்கு கப்பல்கள் கொல்கத்தா - கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) மூலம் மூன்று கப்பல்கள். மற்ற ஆறு போர்க்கப்பல்கள்  நீலகிரி - 2019 ஹிம்கிரி - 2020 உதயகிரி - 2022 துனகிரி - 2022 தாராகிரி - 2022 விந்தியகிரி – 2023 விருதுகள் மற்றும் கௌரவங்கள் 65வது ராமன் மகசேசே விருது 2023 அஸ்ஸாமில் உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (CCHRC) இயக்குநரான அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் ஆர்.ரவி கண்ணன் 2023 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருதாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களை மையப்படுத்திய மற்றும் ஏழை மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மூலம் அசாமில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். மற்ற வெற்றியாளர்கள் கோர்வி ரக்ஷந்த் – பங்களாதேஷ் யூஜெனியோ லெமோஸ் - திமோர்-லெஸ்டே மிரியம் கரோனல்-ஃபெரர் – பிலிப்பைன்ஸ் ராமன் மகசேசே விருது பற்றி உருவாக்கம் – ஆகஸ்ட் 31, 1957 பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வழங்கப்படுகிறது. ஆசியாவின் மக்களுக்குச் சேவை செய்வதில் காட்டப்படும் மகத்துவத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது.  ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அரசு சேவை பொது சேவை சமூக தலைமை பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு கலைகள் அமைதி மற்றும் சர்வதேச புரிதல் அவசர தலைமை குறிப்பு 1958 இல் சமூகத் தலைமைப் பிரிவின் கீழ் ராமன் மகசேசே விருதை வென்ற முதல் இந்தியர் ஆச்சார்யா வினோபா பாவே. நியமனங்கள் இரயில்வே வாரியத்தின் தலைவரான  முதல் பெண்மணி இரயில்வே அமைச்சகத்தின் உயர்மட்ட…

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய சிறு நிறுவனங்கள்  தினம் - ஆகஸ்ட் 30 இந்தியப் பொருளாதாரத்தில் சிறு தொழில்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29 இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது. கருப்பொருள் - " விளையாட்டுகள், உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் காரணி". பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ப்ரைட் ஸ்டார் போர்பயிற்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படை பயிற்சி, பிரைட்-ஸ்டார், 21 நாள் பலதரப்பு போர் ஒத்திகை, எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமான தளத்தில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் அமெரிக்கா  சவுதி அரேபியா கிரீஸ் கத்தார் எகிப்து (நடத்தும் நாடு) இந்தியா குறிப்பு இந்திய விமானப்படை (IAF) ஐந்து MiG-29 போர் விமானங்கள், ஆறு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அதன் சிறப்புப் படை வீரர்களின் குழுவை அனுப்பியுள்ளது. IAF இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். எகிப்து பற்றி அதிபர் - அப்தெல் ஃபத்தா எல்-சிசி தலைநகரம் - கெய்ரோ நாணயம் - எகிப்திய பவுண்ட் சிறந்த நபர்கள் என்.டி. ராமராவ் நினைவு நாணயம்  முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் ₹100 நினைவு நாணயம் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டது. என்.டி.ராமராவ் பற்றி இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். (1983-84; 1984-89; 1994-95) 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) நிறுவினார். விருதுகள் மற்றும் கௌரவம் பத்மஸ்ரீ – 1968 என்டிஆர் தேசிய விருது என்டிஆர் -ஐ கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய விருது. ஆந்திரப் பிரதேச அரசால் 1996 இல் நிறுவப்பட்டது. வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்தியத் திரைப்படத் துறைக்கு செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளை அங்கீகரிப்பது. விளையாட்டு BWF உலக சாம்பியன்ஷிப் BWF உலக சாம்பியன்ஷிப் 2023 டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் நடைபெற்றது. நட்சத்திர இந்திய வீரர் HS பிரணாய் தனது முதல் BWF உலக சாம்பியன்ஷிப் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றார். நியமனங்கள் பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண் கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக ஒரு பெண் இருப்பது இதுவே முதல் முறை. 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி. குறிப்பு Charge d'affaires என்பது தூதுர் அல்லது உயர் ஆணையர் இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் தூதரக பணிக்கு தற்காலிகமாக தலைமை தாங்கும் அதிகாரி குறிக்கும். வெளியுறவு திட்டங்கள் காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே - உயர் ஆணையங்கள் காமன்வெல்த் அல்லாத நாடுகளுக்கு இடையே - தூதரகங்கள் ஆகஸ்ட் 2019, பிரிவு 370 ரத்தானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உயர் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது. பாகிஸ்தான் பற்றி அதிபர் -…

வரலாறு

முக்கிய தினங்கள் உலக தொழில்முனைவோர் தினம் – ஆகஸ்ட் 21 தங்கள் வணிகங்களின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் கண்டுபிடிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சவால்களை சந்திப்பவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு கொண்டாடப்படுகிறது. உலக மூத்த குடிமக்கள் தினம் - ஆகஸ்ட் 21 2023 கருப்பொருள் - "மாறும் உலகில் முதியோர்களின் பின்னடைவு". பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் 2023 கருப்பொருள் - "பாரம்பரியம்: நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்குதல்". விளையாட்டு பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக ஸ்பெயின் சாம்பியன் ஆனது. சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெற்றது.

வரலாறு

முக்கிய தினங்கள் சத்பவனா திவாஸ் - ஆகஸ்ட் 20 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சத்பவனா திவாஸ் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘சத்பவனா’ என்றால் ‘நன்மை’ என்று பொருள். முக்கிய கருப்பொருள் - பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். அக்ஷய் உர்ஜா தினம் - ஆகஸ்ட் 20 புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். உலக கொசு தினம் - ஆகஸ்ட் 20 2022 கருப்பொருள் - மலேரியா நோய்த்தாக்கத்தைக் குறைக்கவும், உயிர்களைக் பாதுகாக்கவும் புதிய நுட்பங்களை பயன்படுத்துங்கள். மாநிலங்களின் சுயவிவரம் கேரளாவில் பெருங்கற்கால தளம் கேரள மாநில தொல்லியல் துறை, மலப்புரம் மாவட்டத்தில், திருநாவாய அருகே, குட்டிப்புரம் கிராமத்தில் உள்ள நாகபரம்பில் ஒரு புதிய பெருங்கற்கால தளத்தைக் கண்டறிந்தது. அந்த இடத்திலிருந்து ஏராளமான பெருங்கற்கால தொப்பி கற்கள், புதைக்குழிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொப்பி கற்கள் பற்றி தொப்பிக் கற்கள், மலையாளத்தில் தொப்பிக்கல்லு என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன,  இவை பெருங்கற்கால காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட கலசங்களில் மூடிகளாகப் பயன்படுத்தப்பட்ட அரைக்கோள லேட்டரைட் கற்கள் ஆகும். கேரளாவைப் பற்றி தலைநகரம் - திருவனந்தபுரம் முதல்வர் - பினராயி விஜயன் கவர்னர் - ஆரிப் முகமது கான் உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் G-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் மாநாடு G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் நிறைவடைந்தது. G20 இந்தியாவின் தலைமையின் கீழ் முன்வைக்கப்பட்ட மூன்று முன்னுரிமைப் பகுதிகளான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவற்றின் கருத்துக்கள் மற்றும் பயன்பாடுகளில் முழுமையான ஒருமித்த கருத்தைக் கூட்டம் வெளிப்படுத்தியது. G20 பற்றி உருவாக்கம் - 26 செப்டம்பர் 1999. தலைமையகம் - புது தில்லி 2023 (G20 தலைமை தாங்கும் நாட்டின் தலைநகரம்) உறுப்பினர் - 20 உறுப்பினர்கள் தலைவர் (தலைமை தாங்கும் நாட்டின் தலைவர்) - நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர். குறிப்பு JAM trinity — ஜன்தன் வங்கிக் கணக்குகள் (ஆகஸ்ட் 28, 2014), ஆதார் (2009) மற்றும் மொபைல் — இந்தியாவில் உள்ளடக்கிய நிதிச்சேவை மற்றும் அதீத டிஜிட்டல் மயமாக்கல். டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு – 2015 விளையாட்டு ICC ODI உலகக் கோப்பை சின்னங்கள் ஒரு நாள் உலகக் கோப்பை (ODI) தொடர் இந்தியாவில் 2023 இல் (அக்டோபர் மற்றும் நவம்பர்) நடைபெற இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலகக் கோப்பைக்கான பிராண்ட் சின்னங்களின் ஜோடியை வெளியிட்டது. இந்த அறிமுக நிகழ்வு இந்தியாவின் குருகிராமில் நடைபெற்றது. இது பாலின சமத்துவத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் சின்னங்கள், தொலைதூர கிரிக்கெட் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கிரிக்டோவர்ஸில் இருந்து உருவானவை ஆகும். தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு (Surf) ஓபன் தமிழ்நாடு…

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய மீன் விவசாயிகள் தினம் – ஜுலை 10 இது மீன் வளர்ப்பாளர்களின் மகத்தான பங்களிப்பையும் நிலையான மீன்வளர்ப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பு இந்தியாவின் மீன்வளத் துறையின் சாதனைகளை நினைவுகூரும் வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது, தமிழகத்தின் மகாபலிபுரத்தில் ”கோடைமாநாடு 2023” மற்றும் ”ஸ்டார்ட் அப் மாநாடு” ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது. உலக மக்கள் தொகை தினம் – ஜுலை 11 2023 கருப்பொருள் – ”பாலின சமத்துவத்தின் சக்தியை கட்டவிழ்த்து விடுதல் : நமது உலகின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளைத் திறக்க பெண்கள் மற்றும் சிறுமிகளின் குரல்கள் உயர்வதை உறுதி செய்தல்”. விளையாட்டு லக்ஷ்யா சென் சாம்பியன் கனடா ஒபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அவர் 21-18, 22-20 என்ற கேம்களில் சீனாவின் லீ ஷி ஃபெங்கை சாய்த்தார். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற பிறகு, லக்ஷ்யா சாம்பியனாகும் முதல் போட்டி இதுவாகும்.

வரலாறு

முக்கிய தினங்கள் உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜுலை 6 இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலக்கியல் நோய்களைப் பற்றி கல்வி கற்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது. 2023 கருப்பொருள் – ஒரு உலகம், ஒரே சுகாதாரம் : விலங்கு வழி நோய்களை தடுக்கவும், பரவுவதை நிறத்தவும். பின்னணி 1885 ஆம் அண்டு இதே நாளில், பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஒரு விலங்கியல் நோயாகும். ஜுலை 6, 2007 அன்று, லூயிஸ் பாஸ்டர் மறைந்த 100வது ஆண்டு நினைவு நாளில், விலங்கியல் நோய்கள் பற்றிய ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் நோய்கள் விலங்கு வழி நோய் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும். விலங்கியல் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான புரத துகள்களை உள்ளடக்கியிருக்கலாம். நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம். இந்தியாவில் விலங்கியல் நோய்கள் உலகின் காடுகளின் நிலை 2022 இன் சமீபத்திய அறிக்கை, விலங்கியல் வைரஸ் நோய்களுக்கான சாத்தியமான அபாய பகுதி என இந்தியாவை கணித்துள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் ரேபிஸ், பன்றிக் காய்ச்சல், நிபா, புருசெல்சோசிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், போர்சின் சிஸ்டிசெர்கோசிஸ், காலா அசார் (கருப்புக் காய்ச்சல்) மற்றும் ஜிகா போன்ற வளர்ந்து வரும் அனைத்து நோய்களும் சுமார் 70% விலங்கு வழி பரவும் இயல்புடையவை. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் உயர் கடல் ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர் (BBNJ) அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தை UN ஏற்றுக்கொண்டது. 1994 மற்றும் 1995 ஒப்பந்தங்களுக்குப் பிறகு, UNCLOS இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இதுவாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையம் மற்றும் மீன் பங்கு ஒப்பந்தத்தை நிறுவியது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்களில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் பல்லுயிர் பெருக்கத்தின் அதிகப்படியான சுரண்டல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலோர மாசுபாடு மற்றும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நீடிக்க முடியாத நடைமுறைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு வில் வித்தை : இந்தியாவுக்கு 2 தங்கம் அயர்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் ஜுனியர் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல் ஐஸ்வர்யா சர்மா/அதிதி சுவாமி/ஏக்தா…

வரலாறு

முக்கிய தினங்கள் உலக காசநோய் தினம் உலக காசநோய் தினம் என்பது 1982 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வாகும், இது காசநோய் (TB) கட்டுப்பாட்டை நோக்கிய சாதனைகளை நினைவுபடுத்தவும், போற்றவும் கொண்டாடப்படுகிறது.  காசநோய் மற்றும் அதன் ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பை முடிந்தவரை ஒழிப்பதற்கான இயக்கத்தில் சேர அனைவரையும் ஊக்குவிக்கிறது.   2023 ஆம் ஆண்டு உலக காசநோய் தினத்தின் கருப்பொருள் " ஆம்! நாம் காசநோயை ஒழிக்க முடியும்!  ". தியாகிகள் தினம்                பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகியோர் 1931ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது உயிரிழந்தனர், அந்த நாள் வரலாற்றில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜ்குரு ஆகியோர் இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் (HSRA) உறுப்பினர்களாக இருந்தனர், இது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும்.