வரலாறு

முக்கிய தினங்கள்

உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜுலை 6

  • இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலக்கியல் நோய்களைப் பற்றி கல்வி கற்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது.
  • 2023 கருப்பொருள் – ஒரு உலகம், ஒரே சுகாதாரம் : விலங்கு வழி நோய்களை தடுக்கவும், பரவுவதை நிறத்தவும்.

பின்னணி

  • 1885 ஆம் அண்டு இதே நாளில், பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஒரு விலங்கியல் நோயாகும்.
  • ஜுலை 6, 2007 அன்று, லூயிஸ் பாஸ்டர் மறைந்த 100வது ஆண்டு நினைவு நாளில், விலங்கியல் நோய்கள் பற்றிய ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டது.

விலங்கியல் நோய்கள்

  • விலங்கு வழி நோய் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும்.
  • விலங்கியல் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான புரத துகள்களை உள்ளடக்கியிருக்கலாம்.
  • நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம்.

இந்தியாவில் விலங்கியல் நோய்கள்

  • உலகின் காடுகளின் நிலை 2022 இன் சமீபத்திய அறிக்கை, விலங்கியல் வைரஸ் நோய்களுக்கான சாத்தியமான அபாய பகுதி என இந்தியாவை கணித்துள்ளது.
  • மனிதர்களைப் பாதிக்கும் ரேபிஸ், பன்றிக் காய்ச்சல், நிபா, புருசெல்சோசிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், போர்சின் சிஸ்டிசெர்கோசிஸ், காலா அசார் (கருப்புக் காய்ச்சல்) மற்றும் ஜிகா போன்ற வளர்ந்து வரும் அனைத்து நோய்களும் சுமார் 70% விலங்கு வழி பரவும் இயல்புடையவை.

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

உயர் கடல் ஒப்பந்தம்

  • தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர் (BBNJ) அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தை UN ஏற்றுக்கொண்டது.
  • 1994 மற்றும் 1995 ஒப்பந்தங்களுக்குப் பிறகு, UNCLOS இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இதுவாகும்.
  • இது சர்வதேச கடற்பரப்பு ஆணையம் மற்றும் மீன் பங்கு ஒப்பந்தத்தை நிறுவியது.
  • சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்களில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் பல்லுயிர் பெருக்கத்தின் அதிகப்படியான சுரண்டல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலோர மாசுபாடு மற்றும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நீடிக்க முடியாத நடைமுறைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விளையாட்டு

வில் வித்தை : இந்தியாவுக்கு 2 தங்கம்

  • அயர்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
  • காம்பவுண்ட் ஜுனியர் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
  • அதேபோல் ஐஸ்வர்யா சர்மா/அதிதி சுவாமி/ஏக்தா ராணி ஆகியோர் அடங்கிய காம்பவுண்ட் மகளிர் அணி 214-212 என அமெரிக்க அணியை சாய்த்து தங்கத்தை தட்டிச் சென்றது.  

அரசு-நலத்திட்டங்கள்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

  • தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் வாயிலாக முற்றிலும் தன்னார்வ முறையில் செயல்படுத்தப்படும் ”புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” என்ற புதிய ஐந்தாண்டு வயது வந்தோர் கல்வித் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தத் திட்டமிட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
  • அனைத்து மாவட்டங்களிலும் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் வரும் செப்படம்பர் மாதம் தொடங்கி 2024 பிப்ரவரி மாதம் வரை ஆறு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் 6 மாதங்களுக்கு 200 மணி நேரம் இந்தத்திட்டம்  செயல்படுத்தப்பட வேண்டும்.
Next வரலாறு >

People also Read