Tag: அரசு-நலத்திட்டங்கள்

அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள் தோழி விடுதிகள் மகளிருக்கென திறக்கப்பட்டுள்ள விடுதிகள், முன்னேறும் பெண்களுக்கான முகவரி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தோழி விடுதிகள், முன்னேறும் மகளிருக்கான முகவரியாகும். மகளிருக்குச் சொத்துரிமை, உள்ளாட்சியில் 33 சதவீதம் ஒதுக்கீடு, உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என மகளிர் முன்னேற்றத்துக்கான நமது திட்டங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் திட்டம் இதுவாகும்.

அரசியல் அறிவியல்

அரசு நலத்திட்டங்கள் ஆட்டோ வாங்க மகளிருக்கு தலா ரூ.1 லட்சம்  பெண் ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, 500 பெண் ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) விருதுகள் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை (DPIIT), ODOP விருதுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. விருதுகள் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளன: ஆக்கபூர்வமான போட்டி, புதுமை மற்றும் திறமையான பொது சேவை வழங்கலை ஊக்குவித்தல். சிறந்த நடைமுறைகளின் பிரதி மற்றும் நிறுவனமயமாக்கலை ஊக்குவித்தல். வெற்றிகரமான அடையாளம் மற்றும் விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளைத் தீர்ப்பதற்காக செய்யப்பட்ட புதுமைகளை அங்கீகரித்தல். குறிப்பு ODOP முதன்முதலில் உத்தரபிரதேசத்தால் 2018 இல் தொடங்கப்பட்டது. பின்னர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமநிலையான பிராந்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ODOP ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுத்து, பிராண்ட் செய்து விளம்பரப்படுத்துகிறது.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் முதுநிலை மருத்துவப் படிப்பு : அரசு மருத்துவர்களின் பணி 5 ஆண்டுகள் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்றும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்துவரை எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள இடங்களை 525 இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது. அவர்கள் முதுநிலை படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வேண்டும் என்பது விதி. அரசு நலத்திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கருணாநிதி பெயர் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. அதன் விவரம்: 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நியாயவிலைக் கடைகள்தான் கணக்கெடுப்பின் மையமாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். பொருளாதாரத் தகுதிகள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்தள்ள குடும்பங்கள். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியான வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை. விதிவிலக்கு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வி மேம்பாடு : மைக்ரோசாஃபட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளதாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம்…

வரலாறு

முக்கிய தினங்கள் உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜுலை 6 இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலக்கியல் நோய்களைப் பற்றி கல்வி கற்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது. 2023 கருப்பொருள் – ஒரு உலகம், ஒரே சுகாதாரம் : விலங்கு வழி நோய்களை தடுக்கவும், பரவுவதை நிறத்தவும். பின்னணி 1885 ஆம் அண்டு இதே நாளில், பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஒரு விலங்கியல் நோயாகும். ஜுலை 6, 2007 அன்று, லூயிஸ் பாஸ்டர் மறைந்த 100வது ஆண்டு நினைவு நாளில், விலங்கியல் நோய்கள் பற்றிய ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் நோய்கள் விலங்கு வழி நோய் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும். விலங்கியல் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான புரத துகள்களை உள்ளடக்கியிருக்கலாம். நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம். இந்தியாவில் விலங்கியல் நோய்கள் உலகின் காடுகளின் நிலை 2022 இன் சமீபத்திய அறிக்கை, விலங்கியல் வைரஸ் நோய்களுக்கான சாத்தியமான அபாய பகுதி என இந்தியாவை கணித்துள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் ரேபிஸ், பன்றிக் காய்ச்சல், நிபா, புருசெல்சோசிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், போர்சின் சிஸ்டிசெர்கோசிஸ், காலா அசார் (கருப்புக் காய்ச்சல்) மற்றும் ஜிகா போன்ற வளர்ந்து வரும் அனைத்து நோய்களும் சுமார் 70% விலங்கு வழி பரவும் இயல்புடையவை. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் உயர் கடல் ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர் (BBNJ) அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தை UN ஏற்றுக்கொண்டது. 1994 மற்றும் 1995 ஒப்பந்தங்களுக்குப் பிறகு, UNCLOS இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இதுவாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையம் மற்றும் மீன் பங்கு ஒப்பந்தத்தை நிறுவியது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்களில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் பல்லுயிர் பெருக்கத்தின் அதிகப்படியான சுரண்டல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலோர மாசுபாடு மற்றும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நீடிக்க முடியாத நடைமுறைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு வில் வித்தை : இந்தியாவுக்கு 2 தங்கம் அயர்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் ஜுனியர் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல் ஐஸ்வர்யா சர்மா/அதிதி சுவாமி/ஏக்தா…