Tag: உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

வரலாறு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் - டிசம்பர் 3 உலகளவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வை பரப்புவதற்கும் ஆதரவைத் திரட்டுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில் 1992 இல் அனுசரிக்கப்பட்டது. கருத்துரு  2023: "மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் செயலில் ஒன்றுபடுதல்" என்பதாகும் உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் COP 28 உச்சி மாநாடு COP 28 உச்சி மாநாடு துபாயில் நவம்பர் 30 முதல் 12 டிசம்பர் 2023 வரை நடைபெறுகிறது. பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவை உள்ளடக்கிய  BASIC குழுவானது, உலகளாவிய பங்களிப்பை  கணக்கிடுவதன் மூலம் வளர்ந்த நாடுகளின்  தோல்விகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. உலகளாவிய பங்களிப்பு (GST)  என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின் ஒரு அடிப்படை அங்கமாகும், இது செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதில் ஏற்பட்ட கூட்டு முன்னேற்றத்தை மதிப்பிடவும் பயன்படுகிறது. BASIC குழுமம் 2009 இல் உருவாக்கப்பட்டது. விளையாட்டு இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பி மற்றும் துரோணவல்லி ஹரிகாவுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையை வைஷாலி பெற்றார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருது 2023 'உள்ளூர் ஆதாரங்களுக்கான சிறந்த - கைவினை மற்றும் உணவு' பிரிவில் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய முன்முயற்சிகளை ஊக்குவித்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருதை கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் வென்றுள்ளது. பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) சுற்றுலா நடவடிக்கைகளுடன் இணைத்ததற்காகவும், உள்நாட்டு தயாரிப்புகளின் பயனுள்ள சந்தைப்படுத்துதலை உறுதி செய்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பொறுப்பு சுற்றுலா கூட்டாண்மை மற்றும் சர்வதேச பொறுப்பு சுற்றுலா மையத்தால் (ICRT) நிறுவப்பட்டது. கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் இவ்விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். கேரளாவின் Water STREET திட்டம் 2022ல் இவ்விருதை வென்றது. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் IPMDA முன்முயற்சியைத் தொடங்கியது குவாட் குவாட் குழுமம் இந்தோ - பசிபிக் கடல்சார் பிராந்திய  விழிப்புணர்வு (IPMDA) முன்முயற்சியைத் தொடங்கியது. இந்த முயற்சியானது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு விரிவான அமைப்பை நிறுவ முயல்கிறது. இந்தோ-பசிபிக் கடல்சார் நடவடிக்கையானது, முக்கியமான கடல் வழித் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிராந்தியத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும். குவாட் பற்றி தொடக்கம் – 2017 குறிக்கோள் - இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தையை எதிர்கொள்வதாகும். உறுப்பினர்கள் - ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா Quad Plus கூடுதல் உறுப்பினர்கள் - நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வியட்நாம். நியமனங்கள் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் தகவல் ஆணையர் ஹீராலால் சமரியாவுக்கு, தலைமை தகவல் ஆணையராக (CIC) ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இப்பதவிக்கு வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இவர்தான். மத்திய தகவல் ஆணையம் (CIC) பற்றி 2005 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்

வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் தலைமையில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. உச்சிமாநாட்டின் விளைவு - ஜோகன்னஸ்பர்க் பிரகடனம் இருதரப்பு சந்திப்புகள்: முக்கிய பிரிக்ஸ் நிகழ்வுகளைத் தவிர, பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்திய தலைவர்கள் சீனா (ஷி ஜின்பிங்) செனகல் மொசாம்பிக் எத்தியோப்பியா ஈரான் இந்தியா, உறுப்பு நாடுகளை இணையுமாறு அழைத்த அமைப்புகள் சர்வதேச சோலார் கூட்டணி ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு இணைப்பு பேரிடர் எதிர்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பு கூட்டணி ஒரு பூமி, ஒரு சுகாதாரம் பெரும் பூனை கூட்டணி உலக பாரம்பரிய மருத்துவ மையம் பிரிக்ஸ் விரிவாக்கம்: ஆறு புதிய நாடுகளைச் சேர்த்து பிரிக்ஸ் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஈரான் ஐக்கிய அரபு நாடுகள் சவூதி அரேபியா அர்ஜென்டினா எகிப்து எத்தியோப்பியா BRICS பற்றி உருவாக்கம் - செப்டம்பர் 2006 1வது BRIC உச்சிமாநாடு 16 ஜூன் 2009 (யெகாடெரின்பர்க்) தலைமையகம் - ஷாங்காய் உறுப்பினர்கள் - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (2010 இல் இணைந்தது) BRICS இன் தற்போதைய தலைவர் - தென்னாப்பிரிக்கா (அதிபர் சிரில் ராமபோசா) புதிய வளர்ச்சி வங்கி – 2015 (Fortaleza declaration) விளையாட்டு செஸ் உலகக் கோப்பை 2023 2023 FIDE உலகக் கோப்பை அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்றது. நார்வே கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் முதல் முறையாக FIDE உலகக் கோப்பையை வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர் R. பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். குறிப்பு 2024 இல் கனடாவின் டொராண்டோவில் நடைபெறும் 2024 கேன்டிடேட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். விருதுகள் மற்றும் கௌரவங்கள் 69வது தேசிய திரைப்பட விருதுகள் 69வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டனர். ஜனவரி 1, 2021 மற்றும் டிசம்பர் 31, 2021க்கு இடையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் (CBFC) சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் தேசிய திரைப்பட விருதுகள் 2021க்குத் தகுதி பெற்றன. 69வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் பட்டியல்: சிறந்த திரைப்படம்: ராக்கெட்ரி சிறந்த இயக்குனர்: நிகில் மகாஜன், கோதாவரி முழுமையான பொழுதுபோக்கு சிறந்த பிரபல திரைப்படம்: RRR தேசிய ஒருமைப்பாடு சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது: தி காஷ்மீர் ஃபைல்ஸ் சிறந்த நடிகர்: அல்லு அர்ஜுன், புஷ்பா சிறந்த நடிகை: ஆலியா பட், கங்குபாய் கத்தியவாடி மற்றும் கிர்தி சனோன், மிமி சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா சிறந்த இசை இயக்கம் (பின்னணி இசை): எம்எம் கீரவாணி, RRR சிறந்த ஆண் பின்னணி பாடகர்: கால பைரவா, RRR சிறந்த பெண் பின்னணிப் பாடகி: ஸ்ரேயா கோஷல், இரவின் நிழல் சிறந்த இந்தி படம்: சர்தார் உத்தம்…

வரலாறு

முக்கிய தினங்கள் சத்பவனா திவாஸ் - ஆகஸ்ட் 20 மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சத்பவனா திவாஸ் கொண்டாடப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘சத்பவனா’ என்றால் ‘நன்மை’ என்று பொருள். முக்கிய கருப்பொருள் - பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லெண்ணத்தை ஊக்குவித்தல். அக்ஷய் உர்ஜா தினம் - ஆகஸ்ட் 20 புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். உலக கொசு தினம் - ஆகஸ்ட் 20 2022 கருப்பொருள் - மலேரியா நோய்த்தாக்கத்தைக் குறைக்கவும், உயிர்களைக் பாதுகாக்கவும் புதிய நுட்பங்களை பயன்படுத்துங்கள். மாநிலங்களின் சுயவிவரம் கேரளாவில் பெருங்கற்கால தளம் கேரள மாநில தொல்லியல் துறை, மலப்புரம் மாவட்டத்தில், திருநாவாய அருகே, குட்டிப்புரம் கிராமத்தில் உள்ள நாகபரம்பில் ஒரு புதிய பெருங்கற்கால தளத்தைக் கண்டறிந்தது. அந்த இடத்திலிருந்து ஏராளமான பெருங்கற்கால தொப்பி கற்கள், புதைக்குழிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தொப்பி கற்கள் பற்றி தொப்பிக் கற்கள், மலையாளத்தில் தொப்பிக்கல்லு என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன,  இவை பெருங்கற்கால காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட கலசங்களில் மூடிகளாகப் பயன்படுத்தப்பட்ட அரைக்கோள லேட்டரைட் கற்கள் ஆகும். கேரளாவைப் பற்றி தலைநகரம் - திருவனந்தபுரம் முதல்வர் - பினராயி விஜயன் கவர்னர் - ஆரிப் முகமது கான் உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் G-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் மாநாடு G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் நிறைவடைந்தது. G20 இந்தியாவின் தலைமையின் கீழ் முன்வைக்கப்பட்ட மூன்று முன்னுரிமைப் பகுதிகளான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவற்றின் கருத்துக்கள் மற்றும் பயன்பாடுகளில் முழுமையான ஒருமித்த கருத்தைக் கூட்டம் வெளிப்படுத்தியது. G20 பற்றி உருவாக்கம் - 26 செப்டம்பர் 1999. தலைமையகம் - புது தில்லி 2023 (G20 தலைமை தாங்கும் நாட்டின் தலைநகரம்) உறுப்பினர் - 20 உறுப்பினர்கள் தலைவர் (தலைமை தாங்கும் நாட்டின் தலைவர்) - நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர். குறிப்பு JAM trinity — ஜன்தன் வங்கிக் கணக்குகள் (ஆகஸ்ட் 28, 2014), ஆதார் (2009) மற்றும் மொபைல் — இந்தியாவில் உள்ளடக்கிய நிதிச்சேவை மற்றும் அதீத டிஜிட்டல் மயமாக்கல். டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு – 2015 விளையாட்டு ICC ODI உலகக் கோப்பை சின்னங்கள் ஒரு நாள் உலகக் கோப்பை (ODI) தொடர் இந்தியாவில் 2023 இல் (அக்டோபர் மற்றும் நவம்பர்) நடைபெற இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலகக் கோப்பைக்கான பிராண்ட் சின்னங்களின் ஜோடியை வெளியிட்டது. இந்த அறிமுக நிகழ்வு இந்தியாவின் குருகிராமில் நடைபெற்றது. இது பாலின சமத்துவத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண் மற்றும் பெண் சின்னங்கள், தொலைதூர கிரிக்கெட் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கிரிக்டோவர்ஸில் இருந்து உருவானவை ஆகும். தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு (Surf) ஓபன் தமிழ்நாடு…

வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் ஐஎன்எஸ் போர்க் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு உள்நாட்டில் கட்டப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணித்தார். ”தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக இக்கப்பல் விளங்குகிறது” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்திய கடற்படைக்காக “புராஜக்ட் 17 ஆல்ஃபா“ (பி17ஏ) திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 6-ஆவது போர்க்கப்பல் இதுவாகும். இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இப்போது 6-ஆவது போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்கள் பி17ஏ திட்டத்தின்கீழ், கொல்கத்தா கார்டன் ரீச் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விந்தியகிரி ஆகும். அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிய இவ்வகை போர்க்கப்பல்கள், 149 மீட்டர் நீளமும் சுமார் 6,670 டன் எடையும் கொண்டவை. மணிக்கு 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூயவை. எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் செயல்படும் இந்தப் போர்க்கப்பல்கள், தரை, வான்வெளி, கடல் என மூன்று பரிமாணங்களிலும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வல்லவை. திட்டம் 17A பற்றி 17 ஆல்பா போர் கப்பல்கள் (P-17A) திட்டம் இந்திய கடற்படையால் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர் கப்பல்களின் எண்ணிக்கையே அதிகப்படுத்துதல். இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டது - Mazagon Dock Shipbuilders (MDL) மற்றும் Garden Reach Shipbuilders & Engineers (GRSE). திட்டம் 17A இன் கீழ் தொடங்கப்பட்ட முதல் போர் கப்பல் நீலகிரி ஆகும். இது 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரேடார்-கதிர்களை உறிஞ்சும் பூச்சுகளைக் கொண்ட குறிப்பிடத்தக்க வடிவமைப்பு, அதன் அணுகுமுறையை எதிரிகளால் கண்டறிய முடியாததாக மாற்றுகிறது. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் பாரம்பரிய மருத்துவம் பற்றிய முதல் உலகளாவிய உச்சி மாநாடு G20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் இணைந்து குஜராத்தின் காந்திநகரில் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கப்பட்டது. கருப்பொருள் - "அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கி" பாரம்பரிய மருத்துவம் பற்றி தன்வந்திரி - ஆயுர்வேதத்தின் கடவுள். யோகா - முதலில் மகரிஷி பதஞ்சலியால் முன்வைக்கப்பட்டது யுனானி - புக்ரத் (ஹிப்போகிரட்டீஸ்) மற்றும் ஜாலினூஸ் (கேலன்) ஆகியோரின் போதனையின் அடிப்படையில் சித்தா - சித்தர் அகத்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். சோவா-ரிக்பா - இமயமலைப் பகுதிகளின் பாரம்பரிய மருத்துவம். ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) - இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கு பொறுப்பு. WHO பற்றி தலைமை இயக்குநர் - டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தலைமையகம் - ஜெனீவா, சுவிட்சர்லாந்து நிறுவப்பட்டது - 7 ஏப்ரல் 1948 விளையாட்டு உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய ஆடவர்…

வரலாறு

முக்கிய தினங்கள் உலக விலங்கு வழி நோய்கள் தினம் – ஜுலை 6 இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய விலக்கியல் நோய்களைப் பற்றி கல்வி கற்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது. 2023 கருப்பொருள் – ஒரு உலகம், ஒரே சுகாதாரம் : விலங்கு வழி நோய்களை தடுக்கவும், பரவுவதை நிறத்தவும். பின்னணி 1885 ஆம் அண்டு இதே நாளில், பிரெஞ்சு உயிரியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார். இது ஒரு விலங்கியல் நோயாகும். ஜுலை 6, 2007 அன்று, லூயிஸ் பாஸ்டர் மறைந்த 100வது ஆண்டு நினைவு நாளில், விலங்கியல் நோய்கள் பற்றிய ஆய்வுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் முதல் உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. விலங்கியல் நோய்கள் விலங்கு வழி நோய் என்பது மனிதரல்லாத விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு தொற்று நோயாகும். விலங்கியல் நோய்க்கிருமிகள் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளாக இருக்கலாம் அல்லது வழக்கத்திற்கு மாறான புரத துகள்களை உள்ளடக்கியிருக்கலாம். நேரடி தொடர்பு அல்லது உணவு, நீர் அல்லது சுற்றுச்சூழலின் மூலம் மனிதர்களுக்கு பரவலாம். இந்தியாவில் விலங்கியல் நோய்கள் உலகின் காடுகளின் நிலை 2022 இன் சமீபத்திய அறிக்கை, விலங்கியல் வைரஸ் நோய்களுக்கான சாத்தியமான அபாய பகுதி என இந்தியாவை கணித்துள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் ரேபிஸ், பன்றிக் காய்ச்சல், நிபா, புருசெல்சோசிஸ், லெப்டோஸ்பைரோசிஸ், போர்சின் சிஸ்டிசெர்கோசிஸ், காலா அசார் (கருப்புக் காய்ச்சல்) மற்றும் ஜிகா போன்ற வளர்ந்து வரும் அனைத்து நோய்களும் சுமார் 70% விலங்கு வழி பரவும் இயல்புடையவை. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் உயர் கடல் ஒப்பந்தம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் பல்லுயிர் (BBNJ) அல்லது உயர் கடல் ஒப்பந்தத்தை UN ஏற்றுக்கொண்டது. 1994 மற்றும் 1995 ஒப்பந்தங்களுக்குப் பிறகு, UNCLOS இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது ஒப்பந்தமாக இதுவாகும். இது சர்வதேச கடற்பரப்பு ஆணையம் மற்றும் மீன் பங்கு ஒப்பந்தத்தை நிறுவியது. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடல்களில் உயிர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அதிகரித்து வரும் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, கடல் பல்லுயிர் பெருக்கத்தின் அதிகப்படியான சுரண்டல், அதிகப்படியான மீன்பிடித்தல், கடலோர மாசுபாடு மற்றும் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட நீடிக்க முடியாத நடைமுறைகள் போன்ற முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டு வில் வித்தை : இந்தியாவுக்கு 2 தங்கம் அயர்லாந்தில் நடைபெறும் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. காம்பவுண்ட் ஜுனியர் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியன்ஷ்/அவ்னீத் கௌர் கூட்டணி 146-144 என்ற புள்ளிகள் கணக்கில் இஸ்ரேல் இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. அதேபோல் ஐஸ்வர்யா சர்மா/அதிதி சுவாமி/ஏக்தா…

வரலாறு

முக்கிய தினங்கள் உலக பால் நாள் – ஜுன் 1 உலக பால் நாள் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்காகக் கடைபிடிக்கப்படும் ஒரு நாளாகும். இது 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 1ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பு பத்மபிபூஷன் விருது பெற்ற டாக்டர் வி.குரியன் இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை ஆவார். உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றம் மாநாடுகள் பிரிக்ஸ் கூட்டம்: அமைச்சர் ஜெய்சங்கர் தென் ஆப்பிரிக்கா பயணம் தென் ஆப்பிரிக்கா தலைநகர் கேப்டௌனில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம். குறிப்பு தலைமையகம் – சீனாவின் ஷாங்காய் நகர். அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் செமி கண்டக்டர் விநியோகம்: இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா இடையே செமி கண்டக்டர் (குறை மின்கடத்தி ) விநியோக முறை  தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. மின்னணு கருவிகளில் மின்சாரத்தைக் கடத்தும் செமி கண்டக்டர் விநியோக முறையை ஏற்படுத்தவும்,  கூட்டுச் சேர்ந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ”உலகில் அதிநவீன செமிகண்டக்டர்களில் 93 சதவீதம் தைவானில் தயாரிக்கப்படுகிறது” செமி கண்டக்டர்களுக்கு அந்நாட்டையே அமெரிக்கா அதிகம் சார்ந்துள்ளது. இந்நிலையில், செமி கண்டக்டர் வடிவமைப்பில் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமான ஒன்றாக உள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் அரசியல் ரீதியில் நிதி முறைகேடு புகார்களில் சிக்கும் நபர்களையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில், அதில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களின் நிதிப் பரிவர்த்தனைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நகை விற்பனைத் துறையில் ஈடுபடும்  நிறுவனங்கள் சேகரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்-ஜிஓ-க்களின் நிதி பரிவர்த்தனை பதிவுகளை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் பராமரிப்பதோடு மட்டுமின்றி, அமலாக்கத் துறை இயக்குநரகம் சார்பில் கேட்கப்படும் போது அந்த விவரங்களை அளிப்பதும் இந்த சட்டத் திருத்தம் மூலமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிதிநிறுவனங்கள் அவர்களின் தன்னார்வ அமைப்பு வாடிக்கையாளர் விவரங்களை நீதி ஆயோக்கின் “தர்பன்“ வலைதளத்தில் பதிவு செய்வதோடு, அத்தகைய வாடிக்கையாளரின் கணக்குப்பதிவுகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் பயங்கரவாத எதிர்ப்புக்கு க்வாட் செயற்குழு நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் நாற்கர கூட்டமைப்பு (க்வாட்) சார்பில் தனி செயற்குழு உருவாக்கப்படவுள்ளதாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவானது கூட்டமைப்பு சார்பில் உருவாக்கப்படவுள்ளது.  அந்தச் செயற்குழுவானது நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதில் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயும் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவில் முதல் கூட்டம் நடப்பாண்டில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் ஜி20 மாநாட்டை இந்தியாவும், ஜி7 மாநாட்டை ஜப்பானும், ஆசியா-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டை அமெரிக்காவும் நடத்தவுள்ளன. க்வாட் அமைப்பு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஜனநாயக நாடுகளின் குழுவாகும். தொடக்கம் – 2017 நோக்கம் இலவச திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்து ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: தில்லியில் தொடக்கம் உலக பொருளாதார சரிவு, பன்முக ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்தியாவின் அழைப்பை ஏற்று, கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அல்லாத இலங்கை, வங்கதேச நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் விருந்தினர்களாக இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். உலக பொருளாதார சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம், உணவு-எரிபொருள்-உரம் ஆகியவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்து வருவது, சரக்கு மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்து வருவது உள்ளிட்ட விவகாரங்களுக்கு. பன்முக ஒத்துழைப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவை குறித்து, ஜி20 தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இந்தியா, அக்கூட்டமைப்பின் பல்வேறு மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.  G20 பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பு தொடக்கம் – 1999 18 வது மாநாடு – புதுடெல்லி கருப்பொருள்: - வாசுதேவ குடும்பம் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் நிதி மோசடியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வழிமுறைகளை வலுப்படுத்த ஜி20 ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியா முடிவு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிதி மோசடியாளர்கள் சட்டவிரோதமாக திரட்டிய சொத்துகளை விரைந்து பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம், தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கான கட்டாயம் மோசடியாளர்களுக்கு ஏற்படும் என்று ஜி20 கூட்டமைப்பின் ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது. ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.