வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29

  • இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் சிங்கின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • கருப்பொருள் – ” விளையாட்டுகள், உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும் காரணி”.

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ப்ரைட் ஸ்டார் போர்பயிற்சி

  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் முப்படை பயிற்சி, பிரைட்-ஸ்டார், 21 நாள் பலதரப்பு போர் ஒத்திகை, எகிப்தில் உள்ள கெய்ரோ (மேற்கு) விமான தளத்தில் நடைபெறுகிறது.

பங்கேற்பாளர்கள்

  • அமெரிக்கா 
  • சவுதி அரேபியா
  • கிரீஸ்
  • கத்தார்
  • எகிப்து (நடத்தும் நாடு)
  • இந்தியா

குறிப்பு

  • இந்திய விமானப்படை (IAF) ஐந்து MiG-29 போர் விமானங்கள், ஆறு போக்குவரத்து விமானங்கள் மற்றும் அதன் சிறப்புப் படை வீரர்களின் குழுவை அனுப்பியுள்ளது.
  • IAF இப்பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

எகிப்து பற்றி

  • அதிபர் – அப்தெல் ஃபத்தா எல்-சிசி
  • தலைநகரம் – கெய்ரோ
  • நாணயம் – எகிப்திய பவுண்ட்

சிறந்த நபர்கள்

என்.டி. ராமராவ் நினைவு நாணயம் 

  • முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ்வின் 100 நினைவு நாணயம் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் வெளியிடப்பட்டது.

என்.டி.ராமராவ் பற்றி

  • இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி
  • மூன்று முறை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் பணியாற்றினார். (1983-84; 1984-89; 1994-95)
  • 1982ல் தெலுங்கு தேசம் கட்சியை (TDP) நிறுவினார்.

விருதுகள் மற்றும் கௌரவம்

  • பத்மஸ்ரீ – 1968
  • என்டிஆர் தேசிய விருது
  • என்டிஆர் -ஐ கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் தேசிய விருது.
  • ஆந்திரப் பிரதேச அரசால் 1996 இல் நிறுவப்பட்டது.
  • வாழ்நாள் சாதனைகள் மற்றும் இந்தியத் திரைப்படத் துறைக்கு செய்த பங்களிப்புகளுக்காக குறிப்பிடத்தக்க திரைப்பட ஆளுமைகளை அங்கீகரிப்பது.

விளையாட்டு

BWF உலக சாம்பியன்ஷிப்

  • BWF உலக சாம்பியன்ஷிப் 2023 டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ராயல் அரங்கில் நடைபெற்றது.
  • நட்சத்திர இந்திய வீரர் HS பிரணாய் தனது முதல் BWF உலக சாம்பியன்ஷிப் பதக்கம் (வெண்கலப் பதக்கம்) வென்றார்.

நியமனங்கள்

பாகிஸ்தானில் இந்திய தூதரகத்திற்கு தலைமை தாங்கிய முதல் பெண்

  • கீதிகா ஸ்ரீவஸ்தவா இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் புதிய பொறுப்பு அதிகாரியாக (CDA) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தின் தலைவராக ஒரு பெண் இருப்பது இதுவே முதல் முறை.
  • 2005 பிரிவு இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரி.

குறிப்பு

  • Charge d’affaires என்பது தூதுர் அல்லது உயர் ஆணையர் இல்லாத நிலையில் ஒரு வெளிநாட்டில் தூதரக பணிக்கு தற்காலிகமாக தலைமை தாங்கும் அதிகாரி குறிக்கும்.
  • வெளியுறவு திட்டங்கள்
  • காமன்வெல்த் நாடுகளுக்கு இடையே – உயர் ஆணையங்கள்
  • காமன்வெல்த் அல்லாத நாடுகளுக்கு இடையே – தூதரகங்கள்
  • ஆகஸ்ட் 2019, பிரிவு 370 ரத்தானது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உயர் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது.

பாகிஸ்தான் பற்றி

  • அதிபர் – ஆரிப் ஆல்வி
  • தலைநகரம் – இஸ்லாமாபாத்
  • நாணயம் – பாகிஸ்தானி ரூபாய்
Next வரலாறு >

People also Read