வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

ஐஎன்எஸ் போர்க் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

  • உள்நாட்டில் கட்டப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணித்தார். ”தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக இக்கப்பல் விளங்குகிறது” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
  • இந்திய கடற்படைக்காக “புராஜக்ட் 17 ஆல்ஃபா“ (பி17ஏ) திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட 6-ஆவது போர்க்கப்பல் இதுவாகும்.
  • இத்திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இப்போது 6-ஆவது போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • பி17ஏ திட்டத்தின்கீழ், கொல்கத்தா கார்டன் ரீச் நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது மற்றும் கடைசி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விந்தியகிரி ஆகும்.
  • அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிய இவ்வகை போர்க்கப்பல்கள், 149 மீட்டர் நீளமும் சுமார் 6,670 டன் எடையும் கொண்டவை. மணிக்கு 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூயவை.
  • எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் செயல்படும் இந்தப் போர்க்கப்பல்கள், தரை, வான்வெளி, கடல் என மூன்று பரிமாணங்களிலும் அச்சுறுத்தல்களை முறியடிக்க வல்லவை.

திட்டம் 17A பற்றி

  • 17 ஆல்பா போர் கப்பல்கள் (P-17A) திட்டம் இந்திய கடற்படையால் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர் கப்பல்களின் எண்ணிக்கையே அதிகப்படுத்துதல்.
  • இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டது – Mazagon Dock Shipbuilders (MDL) மற்றும் Garden Reach Shipbuilders & Engineers (GRSE).
  • திட்டம் 17A இன் கீழ் தொடங்கப்பட்ட முதல் போர் கப்பல் நீலகிரி ஆகும். இது 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ரேடார்-கதிர்களை உறிஞ்சும் பூச்சுகளைக் கொண்ட குறிப்பிடத்தக்க வடிவமைப்பு, அதன் அணுகுமுறையை எதிரிகளால் கண்டறிய முடியாததாக மாற்றுகிறது.

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

பாரம்பரிய மருத்துவம் பற்றிய முதல் உலகளாவிய உச்சி மாநாடு

  • G20 சுகாதார அமைச்சர்கள் கூட்டத்துடன் இணைந்து குஜராத்தின் காந்திநகரில் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கப்பட்டது.
  • கருப்பொருள் – “அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நோக்கி”

பாரம்பரிய மருத்துவம் பற்றி

  • தன்வந்திரி – ஆயுர்வேதத்தின் கடவுள்.
  • யோகா – முதலில் மகரிஷி பதஞ்சலியால் முன்வைக்கப்பட்டது
  • யுனானி – புக்ரத் (ஹிப்போகிரட்டீஸ்) மற்றும் ஜாலினூஸ் (கேலன்) ஆகியோரின் போதனையின் அடிப்படையில்
  • சித்தா – சித்தர் அகத்தியர் சித்த மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
  • சோவா-ரிக்பா – இமயமலைப் பகுதிகளின் பாரம்பரிய மருத்துவம்.
  • ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) – இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பிரச்சாரத்தை மேம்படுத்துவதற்கு பொறுப்பு.

WHO பற்றி

  • தலைமை இயக்குநர் – டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்
  • தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • நிறுவப்பட்டது – 7 ஏப்ரல் 1948

விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல்: இந்திய ஆடவர் அணிக்கு 3-ஆம் இடம்

  • அஜர்பைஜானில் நடைபெறும் ISSF உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

5 இந்திய இளைஞர்களுக்கு சர்வதேச சுற்றுச்சூழல் விருது

  • சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெடுப்புகளை, தங்கள் இளம் வயதிலேயே மேற்கொண்டதற்காக 2023-ஆம் ஆண்டின் “சர்வதேச இளம் சுற்றுச்சூழல் வீரர்“ விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த பதின்ம வயது செயல்பாட்டாளர்கள் 5 பேர் உள்பட 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • மிகவும் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வரும் 8 முதல் 16 வயது வரையிலான சிறார்களை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த “ஆக்ஷன் ஃபார் நேச்சர்“ என்ற அமைப்பு இந்த விருதை கடந்த 20 ஆண்டுகளாக வழங்கி வருகிறது.
  • அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த ஐஹாதீட்சித், பெங்களூரைச் சேர்ந்த மான்யா ஹர்ஷா, தில்லியில் வசிக்கும் நிர்வாண் சோமானி, மன்னத் கௌர், மும்பையைச் சேர்ந்த கர்ணவ் ரஸ்தோகி ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Next வரலாறு >

People also Read