Tag: விருதுகள் மற்றும் கௌரவங்கள்

வரலாறு

முக்கிய தினங்கள் தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் – டிசம்பர் 2 டிசம்பர் 2, 1984 அன்று போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அசுத்தமான நீர், நிலம் மற்றும் காற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  "சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கான நிலையான வளர்ச்சி" என்பதாகும். விருதுகள் மற்றும் கௌரவங்கள் சாகித்ய அகாடமி விருது 2024 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் ராஜசேகரன் ஆகும். நியமனங்கள் ராஜஸ்தான் புதிய முதல்வர் ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா  தேர்ந்தெடுக்கப்பட்டார். தியா குமாரி  மற்றும் பிரேம்சந்த் பைரவா  ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள் உலகளாவிய AI உச்சி மாநாடு செயற்கை நுண்ணறிவுக்கான வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை (GPAI) உச்சிமாநாடு புது தில்லியின் பாரத் மண்டபத்தில் தொடங்கப்பட்டது, இதில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச்  சவால்கள் போன்ற AI சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. 2024 இல், GPAI குழுமத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது.

வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் பிரளய்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. ‘பிரளய்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (DRDO) உருவாக்கியது. இந்த குறுகிய தொலைவு ஏவுகணையானது 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள வெடி குண்டுகளைச் சுமந்தவாறு பறந்து 350 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஒடிஸா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில், அந்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது அனைத்து குறிக்கோள்களையும் ஏவுகணை பூர்த்தி செய்தது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. விருதுகள் மற்றும் கௌரவங்கள் ரோகிணி நய்யார் பரிசு கிராமப்புற மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்பிற்காக சமூக சேவகர் தீனநாத் ராஜ்புத்திற்கு ரோகிணி நய்யார் பரிசு வழங்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பினை (FPO) நிறுவியதன் மூலம் சத்தீஸ்கரில் உள்ள 6,000 பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.   முதல் விருதாளர்  - செத்ரிசெம் சங்டம் (2022)

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருது 2023 'உள்ளூர் ஆதாரங்களுக்கான சிறந்த - கைவினை மற்றும் உணவு' பிரிவில் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய முன்முயற்சிகளை ஊக்குவித்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருதை கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் வென்றுள்ளது. பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) சுற்றுலா நடவடிக்கைகளுடன் இணைத்ததற்காகவும், உள்நாட்டு தயாரிப்புகளின் பயனுள்ள சந்தைப்படுத்துதலை உறுதி செய்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பொறுப்பு சுற்றுலா கூட்டாண்மை மற்றும் சர்வதேச பொறுப்பு சுற்றுலா மையத்தால் (ICRT) நிறுவப்பட்டது. கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் இவ்விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். கேரளாவின் Water STREET திட்டம் 2022ல் இவ்விருதை வென்றது. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் IPMDA முன்முயற்சியைத் தொடங்கியது குவாட் குவாட் குழுமம் இந்தோ - பசிபிக் கடல்சார் பிராந்திய  விழிப்புணர்வு (IPMDA) முன்முயற்சியைத் தொடங்கியது. இந்த முயற்சியானது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு விரிவான அமைப்பை நிறுவ முயல்கிறது. இந்தோ-பசிபிக் கடல்சார் நடவடிக்கையானது, முக்கியமான கடல் வழித் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிராந்தியத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும். குவாட் பற்றி தொடக்கம் – 2017 குறிக்கோள் - இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தையை எதிர்கொள்வதாகும். உறுப்பினர்கள் - ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா Quad Plus கூடுதல் உறுப்பினர்கள் - நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வியட்நாம். நியமனங்கள் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் தகவல் ஆணையர் ஹீராலால் சமரியாவுக்கு, தலைமை தகவல் ஆணையராக (CIC) ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இப்பதவிக்கு வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இவர்தான். மத்திய தகவல் ஆணையம் (CIC) பற்றி 2005 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் 2022 கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான பொலிவுறு நகரங்கள் திட்ட விருதுகள் பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி)திட்டத்தின் கீழ் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. இது ISAC விருதுகளின் நான்காவது பதிப்பாகும். விருது வென்றவர்கள் சிறந்த நகரங்களுக்கான பட்டியல் முதலிடம் - இந்தூர் (மத்திய பிரதேசம்) 2-வது இடம் -  சூரத் (குஜராத்) 3-வது இடம் – ஆக்ரா (உத்தர பிரதேசம்) சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் முதலிடம் - மத்திய பிரதேசம் 2-வது இடம் -  தமிழகம் 3-வது இடம் – ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் சிறந்த யூனியன் பிரதேசம் - சண்டீகர் குறிப்பு COVID¬19 தொற்றுநோய் காரணமாக 2021 இல் விருதுகள் வழங்கப்படவில்லை. பொலிவுறு நகரங்கள் திட்டம் பற்றி தொடக்கம் -  ஜூன் 25, 2015 குறிக்கோள் - 'ஸ்மார்ட்' தீர்வுகள் மூலம் முக்கிய உள்கட்டமைப்பை வழங்கும் நகரங்களை மேம்படுத்துதல் மற்றும் அதன் குடிமக்களுக்கு சீரான வாழ்க்கைத் தரம், சுத்தமான மற்றும் நிலையான சூழலை வழங்குதல். 100 நகரங்கள் - இரண்டு கட்ட போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.   விளையாட்டு 53வது ISSF உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2023 (பாகு, அஜர்பைஜான்) 50 மீ பிஸ்டல் போட்டியில் தியானா போகட், சாக்ஷி சூர்யவன்ஷி மற்றும் கிரண்தீப் கவுர் தங்கம் வென்றனர். உலக சாம்பியன்ஷிப் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பதக்கப் பட்டியல் முதலிடம் – சீனா 2 வது இடம் – இந்தியா 3 வது இடம் - அமெரிக்கா குறிப்பு இப்போட்டி 2024 கோடைகால ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டியாகவும் செயல்படுகிறது

வரலாறு

முக்கிய தினங்கள் கல்வி வளர்ச்சி நாள் – ஜுலை 15 தமிழகத்தில் கல்வியறிவின்மையை நீக்கும் நோக்கில், முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் பிறந்த நாளான ஜுலை 15-ஆம் தேதி, ”கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. உலக அமைப்புகள் சைபர் குற்றங்களுக்கு எதிராக எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ), மெட்டாவெர்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப காலத்தில் நிகழும் குற்றங்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஜி20 நாடுகளின் கூட்டம் ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றது. எண்ம முறையிலான அடையாளப்படுத்தலுக்காக ஆதார், நிகழ் நேரத்தில் விரைவான பணப்பரிமாற்றத்துக்காக யுபிஐ உள்ளிட்ட எண்ம உள்கட்டமைப்புகள் இதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கான அமைப்பு (சிசிடிஎன்எஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றத்துக்கு எதிராக இந்திய சைபர்-குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை (ஐ4சி) மத்திய அரசு நிறுவியுள்ளது. புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் புத்தக வெளியீடு தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ”பல்லுயிர் மற்றும் சதுப்புநிலச் சூழலின் முக்கியத்துவம்” என்ற புத்தகத்தையும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். தற்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என 3 மொழிகளில் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். விரைவில் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க உள்ளோம் என்றார் அவர். விருதுகள் மற்றும் கௌரவங்கள் பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது பிரான்ஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் இமானுவல் மேக்ரான் கௌரவித்தார். பாரீஸில் உள்ள எலைசி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருதான ”கிராண்ட்கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானார்” விருது வழங்கப்பட்டது. பிரான்ஸின் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலா, பிரிட்டன் அரசர் சார்லஸ், ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கெல், ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் போட்ரஸ் காலி உள்ளிட்டோர் அந்த உயரிய விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர். குறிப்பு பிரதமர் மோடிக்குக் கடந்த மாதத்தில் எகிப்தின் உயரிய விருது வழங்கப்பட்டிருந்தது. பப்புவா நியூ கினியா, ஃபிஜி, அமெரிக்கா, பூடான், பஹ்ரைன், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளையும் பிரதமர் மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் யுனெஸ்கோவில் இருந்து தமிழக வன அதிகாரிக்கு விருது வனவிலங்கு காவலர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட வன அதிகாரி (DFO) ஜெகதீஷ் பக்கன், யுனெஸ்கோவில் இருந்து விருது பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) உயிர்க்கோள காப்பக மேலாண்மைக்கான மைக்கேல் பாட்டிஸ் 2023 விருதுக்கு திரு.பக்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மன்னார் வளைகுடாவில் அவரது உயிர்க்கோள காப்பக சேவை பணிக்கு இது வழங்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ பற்றி பெற்றோர் அமைப்பு: ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபை தற்போதைய தலைவர்: ஆட்ரி அசோலே (தலைமை இயக்குனர்) தலைமையகம்: பாரிஸ், பிரான்ஸ் உருவாக்கம்: 16 நவம்பர் 1945 சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் சென்னை-இலங்கை சுற்றுலா போக்குவரத்துக் கப்பல் சேவை சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, இலங்கையின் அம்பாந்தோட்டை, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்கள் இடையே பயணிக்கவுள்ள எம்.வி.எம்பிரஸ் என்ற சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பலை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்.  கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக, சுற்றுலா பயணிகளுக்கான சொகுசு கப்பலை இயக்குவது என்பது சென்னை துறைமுக வரலாற்றில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தலைநகரங்கள்: கொழும்பு (நிர்வாகம் மற்றும் நீதித்துறை), ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே (சட்டமன்றம்) அதிகாரபூர்வ மொழிகள்: சிங்களம் மற்றும் தமிழ் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்: ஆங்கிலம்  நாணயம்: இலங்கை ரூபாய்

வரலாறு

முக்கிய தினங்கள் உலக புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31 இது புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1987 - இல் உலகளாவிய அனுசரிப்பு தினத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. முதல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மே 31, 1988 அன்று அனுசரிக்கப்பட்டது. 2023 இன் கருப்பொருள் ”எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல”. குறிப்பு சீனாவுக்கு அடுத்தபடியாக பீடி, சிகரெட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. விருதுகள் மற்றும் கௌரவங்கள்  57வது ஞானபீட விருது புகழ்பெற்ற கொங்கனி நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமான தாமோதர் மௌசோ 57 வது ஞானபீட விருதை வென்றார். ஆண்டுதோறும் வழங்கப்படும் ஞானபீட விருது மிகப் பழமையான மற்றும் மிக உயர்ந்த இந்தியா இலக்கிய விருது. இது பாரதிய ஞானபீட இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அமைப்பால் வழங்கப்படுகிறது. இது புது தில்லியில் உள்ளது. தாமோதர் மௌஸோவுக்கு 1983 இல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்த இலக்கிய விருதை வென்ற முதல் கொங்கனி எழுத்தாளர் ரவீந்திர கெலேகர் (2006-இல்) ஆவார். அஸ்ஸாமி கவிஞர் நில்மணி பூகன் 56வது ஞானபீட விருதை வென்றார். பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார்.

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் மகளிர் நலன்: ஆட்சியர்களுக்கு விருது பெண் குழந்தைகள், மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக, திருவள்ளுர் மாவட்டத்துக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. ஔவையார் விருது: இலக்கியம் சமூகப் பணிகளில் சிறந்து விளங்குவதற்காக, நீலகிரி மாவட்டத்தைச்  சேர்ந்த கமலம் சின்னசாமிக்கு ஔவையார் விருது அளிக்கப்பட்டது. 90 வயதாகும் அவர், 43 நுால்களை எழுதியுள்ளார்.  பாராட்டுச் சான்றிதழ் எட்டு கிராம் தங்கப் பதக்கம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோன்று, சேலத்தைச் சேர்ந்த இளம்பிறைக்கு பெண் குழந்தை விருது அளிக்கப்பட்டது.  அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்துாக்கி பழுதானபோது, அதை சரி செய்ய அறிவியல்  ஆர்வம் காரணமாக புது கருவியை கண்டுபிடித்ததற்காக இவ்விருதை முதல்வர் அளித்தார்.  இந்த விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் அடங்கியது.