வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

செமி கண்டக்டர் விநியோகம்: இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்

  • இந்தியா, அமெரிக்கா இடையே செமி கண்டக்டர் (குறை மின்கடத்தி ) விநியோக முறை  தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
  • மின்னணு கருவிகளில் மின்சாரத்தைக் கடத்தும் செமி கண்டக்டர் விநியோக முறையை ஏற்படுத்தவும்,  கூட்டுச் சேர்ந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கவும் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
  • ”உலகில் அதிநவீன செமிகண்டக்டர்களில் 93 சதவீதம் தைவானில் தயாரிக்கப்படுகிறது”
  • செமி கண்டக்டர்களுக்கு அந்நாட்டையே அமெரிக்கா அதிகம் சார்ந்துள்ளது.
  • இந்நிலையில், செமி கண்டக்டர் வடிவமைப்பில் இந்தியா – அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமான ஒன்றாக உள்ளது.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் திருத்தம்

  • அரசியல் ரீதியில் நிதி முறைகேடு புகார்களில் சிக்கும் நபர்களையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில், அதில் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, அரசியல் ரீதியில் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களின் நிதிப் பரிவர்த்தனைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் நகை விற்பனைத் துறையில் ஈடுபடும்  நிறுவனங்கள் சேகரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • என்-ஜிஓ-க்களின் நிதி பரிவர்த்தனை பதிவுகளை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் பராமரிப்பதோடு மட்டுமின்றி, அமலாக்கத் துறை இயக்குநரகம் சார்பில் கேட்கப்படும் போது அந்த விவரங்களை அளிப்பதும் இந்த சட்டத் திருத்தம் மூலமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • நிதிநிறுவனங்கள் அவர்களின் தன்னார்வ அமைப்பு வாடிக்கையாளர் விவரங்களை நீதி ஆயோக்கின் “தர்பன்“ வலைதளத்தில் பதிவு செய்வதோடு, அத்தகைய வாடிக்கையாளரின் கணக்குப்பதிவுகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Next வரலாறு >

People also Read