வரலாறு

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் – டிசம்பர் 3

  • உலகளவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வுக்கான விழிப்புணர்வை பரப்புவதற்கும் ஆதரவைத் திரட்டுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 அன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாள் முதன்முதலில் 1992 இல் அனுசரிக்கப்பட்டது.
  • கருத்துரு  2023: “மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கும் செயலில் ஒன்றுபடுதல்” என்பதாகும்

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

COP 28 உச்சி மாநாடு

  • COP 28 உச்சி மாநாடு துபாயில் நவம்பர் 30 முதல் 12 டிசம்பர் 2023 வரை நடைபெறுகிறது.
  • பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவை உள்ளடக்கிய  BASIC குழுவானது, உலகளாவிய பங்களிப்பை  கணக்கிடுவதன் மூலம் வளர்ந்த நாடுகளின்  தோல்விகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • உலகளாவிய பங்களிப்பு (GST)  என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின் ஒரு அடிப்படை அங்கமாகும், இது செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதில் ஏற்பட்ட கூட்டு முன்னேற்றத்தை மதிப்பிடவும் பயன்படுகிறது.
  • BASIC குழுமம் 2009 இல் உருவாக்கப்பட்டது.

விளையாட்டு

இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர்

  • கோனேரு ஹம்பி மற்றும் துரோணவல்லி ஹரிகாவுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியப் பெண்மணி என்ற பெருமையை வைஷாலி பெற்றார்.
  • இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
Next Current Affairs வரலாறு >

People also Read