வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

பயங்கரவாத எதிர்ப்புக்கு க்வாட் செயற்குழு

  • நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் நாற்கர கூட்டமைப்பு (க்வாட்) சார்பில் தனி செயற்குழு உருவாக்கப்படவுள்ளதாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
  • பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவானது கூட்டமைப்பு சார்பில் உருவாக்கப்படவுள்ளது. 
  • அந்தச் செயற்குழுவானது நவீன பயங்கரவாத சவால்களை எதிர்கொள்வதில் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயும் இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு இடையேயும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பயங்கரவாத எதிர்ப்பு செயற்குழுவில் முதல் கூட்டம் நடப்பாண்டில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
  • நடப்பாண்டில் ஜி20 மாநாட்டை இந்தியாவும், ஜி7 மாநாட்டை ஜப்பானும், ஆசியா-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டை அமெரிக்காவும் நடத்தவுள்ளன.

க்வாட் அமைப்பு

  • இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஜனநாயக நாடுகளின் குழுவாகும்.
  • தொடக்கம் – 2017

நோக்கம்

  • இலவச திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதிசெய்து ஆதரவளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
Next வரலாறு >

People also Read