வரலாறு

முக்கிய தினங்கள்

சத்பவனா திவாஸ் – ஆகஸ்ட் 20

  • மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் சத்பவனா திவாஸ் கொண்டாடப்படுகிறது.
  • ஆங்கிலத்தில் ‘சத்பவனா’ என்றால் ‘நன்மை’ என்று பொருள்.
  • முக்கிய கருப்பொருள் – பல்வேறு நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லெண்ணத்தை ஊக்குவித்தல்.

அக்ஷய் உர்ஜா தினம் – ஆகஸ்ட் 20

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

உலக கொசு தினம் – ஆகஸ்ட் 20

  • 2022 கருப்பொருள் – மலேரியா நோய்த்தாக்கத்தைக் குறைக்கவும், உயிர்களைக் பாதுகாக்கவும் புதிய நுட்பங்களை பயன்படுத்துங்கள்.

மாநிலங்களின் சுயவிவரம்

கேரளாவில் பெருங்கற்கால தளம்

  • கேரள மாநில தொல்லியல் துறை, மலப்புரம் மாவட்டத்தில், திருநாவாய அருகே, குட்டிப்புரம் கிராமத்தில் உள்ள நாகபரம்பில் ஒரு புதிய பெருங்கற்கால தளத்தைக் கண்டறிந்தது.
  • அந்த இடத்திலிருந்து ஏராளமான பெருங்கற்கால தொப்பி கற்கள், புதைக்குழிகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தொப்பி கற்கள் பற்றி

  • தொப்பிக் கற்கள், மலையாளத்தில் தொப்பிக்கல்லு என்று பிரபலமாக அழைக்கப்படுகின்றன, 
  • இவை பெருங்கற்கால காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட கலசங்களில் மூடிகளாகப் பயன்படுத்தப்பட்ட அரைக்கோள லேட்டரைட் கற்கள் ஆகும்.

கேரளாவைப் பற்றி

  • தலைநகரம் – திருவனந்தபுரம்
  • முதல்வர் – பினராயி விஜயன்
  • கவர்னர் – ஆரிப் முகமது கான்

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

G-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் மாநாடு

  • G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் பெங்களூருவில் நிறைவடைந்தது.
  • G20 இந்தியாவின் தலைமையின் கீழ் முன்வைக்கப்பட்ட மூன்று முன்னுரிமைப் பகுதிகளான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் திறன் ஆகியவற்றின் கருத்துக்கள் மற்றும் பயன்பாடுகளில் முழுமையான ஒருமித்த கருத்தைக் கூட்டம் வெளிப்படுத்தியது.

G20 பற்றி

  • உருவாக்கம் – 26 செப்டம்பர் 1999.
  • தலைமையகம் – புது தில்லி 2023 (G20 தலைமை தாங்கும் நாட்டின் தலைநகரம்)
  • உறுப்பினர் – 20 உறுப்பினர்கள்
  • தலைவர் (தலைமை தாங்கும் நாட்டின் தலைவர்) – நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்.

குறிப்பு

  • JAM trinity — ஜன்தன் வங்கிக் கணக்குகள் (ஆகஸ்ட் 28, 2014), ஆதார் (2009) மற்றும் மொபைல் — இந்தியாவில் உள்ளடக்கிய நிதிச்சேவை மற்றும் அதீத டிஜிட்டல் மயமாக்கல்.
  • டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு – 2015

விளையாட்டு

ICC ODI உலகக் கோப்பை சின்னங்கள்

  • ஒரு நாள் உலகக் கோப்பை (ODI) தொடர் இந்தியாவில் 2023 இல் (அக்டோபர் மற்றும் நவம்பர்) நடைபெற இருக்கிறது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலகக் கோப்பைக்கான பிராண்ட் சின்னங்களின் ஜோடியை வெளியிட்டது.
  • இந்த அறிமுக நிகழ்வு இந்தியாவின் குருகிராமில் நடைபெற்றது.
  • இது பாலின சமத்துவத்தையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண் மற்றும் பெண் சின்னங்கள், தொலைதூர கிரிக்கெட் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கிரிக்டோவர்ஸில் இருந்து உருவானவை ஆகும்.

தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு (Surf) ஓபன்

  • தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு (Surf) ஓபன் வேர்ல்ட் சர்ப் லீக் (WSL) தகுதித் தொடர் (QS) 3,000 போட்டி சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்றது.
  • தொடக்க தமிழ்நாடு சர்வதேச அலைச்சறுக்கு (Surf)  ஓபனில் ஜப்பானிய ஜோடிகளான சாரா வகிதா மற்றும் டென்ஷி இவாமி ஆகியோர் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளனர்.
Next வரலாறு >

People also Read