Tag: நியமனங்கள் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருது 2023 'உள்ளூர் ஆதாரங்களுக்கான சிறந்த - கைவினை மற்றும் உணவு' பிரிவில் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய முன்முயற்சிகளை ஊக்குவித்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருதை கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் வென்றுள்ளது. பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) சுற்றுலா நடவடிக்கைகளுடன் இணைத்ததற்காகவும், உள்நாட்டு தயாரிப்புகளின் பயனுள்ள சந்தைப்படுத்துதலை உறுதி செய்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பொறுப்பு சுற்றுலா கூட்டாண்மை மற்றும் சர்வதேச பொறுப்பு சுற்றுலா மையத்தால் (ICRT) நிறுவப்பட்டது. கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் இவ்விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். கேரளாவின் Water STREET திட்டம் 2022ல் இவ்விருதை வென்றது. உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள் IPMDA முன்முயற்சியைத் தொடங்கியது குவாட் குவாட் குழுமம் இந்தோ - பசிபிக் கடல்சார் பிராந்திய  விழிப்புணர்வு (IPMDA) முன்முயற்சியைத் தொடங்கியது. இந்த முயற்சியானது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு விரிவான அமைப்பை நிறுவ முயல்கிறது. இந்தோ-பசிபிக் கடல்சார் நடவடிக்கையானது, முக்கியமான கடல் வழித் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிராந்தியத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும். குவாட் பற்றி தொடக்கம் – 2017 குறிக்கோள் - இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தையை எதிர்கொள்வதாகும். உறுப்பினர்கள் - ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா Quad Plus கூடுதல் உறுப்பினர்கள் - நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வியட்நாம். நியமனங்கள் புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம் தகவல் ஆணையர் ஹீராலால் சமரியாவுக்கு, தலைமை தகவல் ஆணையராக (CIC) ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இப்பதவிக்கு வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இவர்தான். மத்திய தகவல் ஆணையம் (CIC) பற்றி 2005 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்