Tag: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா - அமெரிக்க பாதுகாப்பை துரிதப்படுத்துவதற்கான சூழல் அமைப்பு (INDUS-X) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள சிறந்த பாதுகாப்புக்கான  கண்டுபிடிப்புகள் (iDEX), மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை இணைந்து  முதல் INDUS-X முதலீட்டாளர்கள் சந்திப்பை புதுதில்லியில் ஏற்பாடு செய்தன. INDUS-X பற்றி இது  ஜூன் 2023 இல் தொடங்கப்பட்டது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உத்தி சார்ந்த  தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை  இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா – பூடான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானின் ஐந்தாவது மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்தார். முக்கிய முடிவுகள் அசாமில் உள்ள கெலேபு மற்றும் கோக்ரஜார் இடையே 58 கிமீ குறுக்கு ரயில் இணைப்பு இந்தியாவால் கட்டப்பட உள்ளது. பூட்டானில் உள்ள சாம்ட்சே மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பனார்ஹட் இடையே சுமார் 18 கிமீ தூரத்திற்கு இரண்டாவது ரயில் இணைப்புப் பாதையை நிறுவுதல். தாத்கிரியில் (அஸ்ஸாம்) ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை  (ICP) நிறுவுதல் பூடான் மற்றும் அஸ்ஸாம் எல்லையில் உள்ள கெலெபுவில் ஸ்மார்ட் சிட்டியை நிறுவுதல். மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் டெல்லியில் மீண்டும் ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டம் புது தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நவம்பர் 13 முதல் 20 வரை ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டத்தை அமல்படுத்துவதாக அரசு  அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்பை விட சுமார் 18 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியில் காற்று மாசுபாடு "கடுமையான" பிரிவில் தொடர்கிறது . இத்திட்டம்  முதன் முதலில் 2016இல் செயல்படுத்தப்பட்டது.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இருதரப்பு ரயில் இணைப்புப்பாதை தொடக்கம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் முறையே புது தில்லி மற்றும் டாக்காவிலிருந்து அகர்தலா மற்றும் அகௌரா இடையே இருதரப்பு ரயில் இணைப்பு பாதையைத் தொடங்கி வைத்தனர். அகர்தலா - அகௌரா ரயில் பாதையானது 12.24 கி.மீ நீளம் கொண்டது. இதில், 5.46 கி.மீ திரிபுராவிலும்  மற்றும் 6.78 கி.மீ வங்காளதேசத்தின் பஹ்மன்பரியா மாவட்டத்தின் அகௌராவிலும் உள்ளது. இந்த திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் இணைப்புக்கு முக்கியமானதாக இருக்கும்  மேலும் இது திரிபுராவை சுற்றுலாவின் நுழைவாயிலாக மாற்றும். இந்த திட்டம் 2013 இல் கையெழுத்திடப்பட்டது. குறிப்பு திரிபுரா வங்கதேசத்துடன் 856 கிமீ நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. மேற்கு வங்காளத்திற்குப் பிறகு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது மிக நீண்ட எல்லை இதுவாகும். இந்தியா - அமெரிக்கா இடையே ‘2+2’ பேச்சுவார்த்தை இந்தியாவும் அமெரிக்காவும் புதுதில்லியில் ‘2+2’ உரையாடலை நடத்த உள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையே ‘2+2’ உரையாடல் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளுடனான  2+2 பேச்சுவார்த்தை ஜப்பான் ஆஸ்திரேலியா ரஷ்யா இங்கிலாந்து

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா – கிரீஸ் இந்தியாவும் கிரேக்கமும் இருதரப்பு உறவுகளை மூலோபாய கூட்டாண்மை நிலைக்கு மேம்படுத்த ஒப்புக்கொண்டன. இரு நாடுகளும் பாதுகாப்பு, கட்டமைப்புகள் மேம்பாடு, கல்வி, நவீன தொழில்நுட்பங்கள், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களுக்கிடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ”தி கிரேண்ட் கிராஸ் ஆஃப் ஆர்டர் ஆஃப் ஹானர்” (The Grand Cross of the Order of Honour). இருதரப்பு வர்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு 1983 இல் கடைசியாக இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி கிரீஸ் சென்றார். கிரீஸ் பற்றி தலைநகரம் – ஏதென்ஸ் ஜனாதிபதி - கேத்தரினா சேகலரபொலு பிரதமர் - கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் நாணயம் - யூரோ

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா - ஆசியான் சந்திப்பு ஆசியான் அமைப்பின் 20வது இந்திய பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ​​இந்தியாவும் ஆசியான் நாடுகளும் தங்களுடைய பொருட்களுக்கான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான முடிவை எட்டியதுடன் 2025ஆம் ஆண்டிற்குள் மதிப்பாய்வை முடிக்க முடிவு செய்தன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் – ASEAN- இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் (AITIGA) 2009இல் கையெழுத்தானது. ASEAN பற்றி உருவாக்கம் - 8 ஆகஸ்ட் 1967. தலைமையகம் - ஜகார்த்தா, இந்தோனேசியா. உறுப்பினர்கள் - 10 நாடுகள் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்). மத்திய அரசாங்கம் - பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் பசுமை புத்தாய்வுத் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இரண்டு ஆண்டு முதல்வர் பசுமை பெல்லோஷிப் திட்டத்தை (CMGFP) தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 2021-22 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. நோடல் அமைப்பு - சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத் துறை. செயல்படுத்துவதற்கான அறிவு கூட்டாளர் - இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி ஸ்டடீஸ் (IES), அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. மொத்தம் 40 பசுமை பங்கேற்பாளர்கள் (மாவட்ட அளவில் 38 மற்றும் மாநில அளவில் 2) CMGFP இன் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகத்தை ஆதரிப்பதே கூட்டாளிகளின் முதன்மைப் பாத்திரமாக இருக்கும். தமிழக அரசின் மூன்று பணி திட்டங்களில், பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தமிழ்நாடு ஈரநிலப் இயக்கம் குறிப்பு பசுமைத் தமிழ்நாடு இயக்கம் (செப்டம்பர் 24, 2022) - 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பசுமைப் பரப்பை 23.7%லிருந்து 33% ஆக உயர்த்துதல். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் - காலநிலை மாற்றத்திற்கு பதிலளிப்பதற்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் கூட்டு மனித நடவடிக்கையை விரிவுபடுத்துதல். தமிழ்நாடு சதுப்பு நிலப் இயக்கம் - 5 ஆண்டுகளில் 100 சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து வரைபடமாக்குவது.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை “இந்தியாவில் கல்வி“ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம் இந்தியாவில் உயர்கல்வி மேற்கொள்ள வரும் வெளிநாட்டு மாணவர்களின் பயணம் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில் 'இந்தியாவில் கல்வி (எஸ்ஐஐ)’ என்ற புதிய வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வலை தளம் மூலமாக இந்தியாவில் உயர் கல்வி பயில்வதற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் நுழைவு இசைவு (விசா) அனுமதி பதிவு ஆகியவற்றை வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக மேற்கொள்ள முடியும். பொது தேர்தலில் நடக்கும் பிரச்சனைகள் 3 முக்கியத் தேர்தலுக்கு பொது வாக்காளர் பட்டியல் நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தலுக்கு பொது வாக்காளர் பட்டியலை (ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்) அறிமுகப்படுத்த சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத் துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இந்த முன்மொழிவு பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர் மற்றும் சட்டம் - நீதி தொடர்பான துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் உள்ளது. நாட்டில் தற்போதுள்ள தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலும், தேர்தல் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான செயல்முறையிலும் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ECI பற்றி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். சட்டப்பிரிவு 324 - பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், இந்திய ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் இந்திய துணை ஜனாதிபதியின் அலுவலகம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம்.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரதமர் பிரான்ஸ் பயணம் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகர் பாரீஸில் (ஜுலை 14) நடைபெறுகின்றன. அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமர் மோடி பிரான்ஸுக்கு புறப்படுகிறார். தனது இரு நாள் பிரான்ஸ் பயணத்தின்போது, அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய பேரவையின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தப் பயணத்தின்போது பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்கார்பியன் நீர்முழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும். பிரான்ஸ் பற்றி தலைவர் - இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் - எலிசபெத் போர்ன் தலைநகரம் - பாரிஸ் நாணயம் - (பிரெஞ்சு) பிராங்க் பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் பணிபுரியும் மகளிருக்கு அரசு விடுதி பணிபுரியும் பெண்களுக்காக தமிழக அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. ”தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்குதல், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடையாறு, சாஸ்திரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். இந்த விடுதியில் 98 படுக்கை வசதியுடன் ஒருவர், இருவர், நால்வர், ஆறு பேர் தங்கும் வகையில் அறை வசதிகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, இலவச வைஃபை, பயோமெட்ரிக் பதிவேடு வசதி, பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இந்த விடுதிக்கு http://www.tnwwhcl.in/ என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  மலேசியாவில் ஹெச்ஏஎல் பிராந்திய அலுவலகம் திறப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏல்) பிராந்திய அலுவலகத்தை, கோலாலம்பூரில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அந்த அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தொழில் சார் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாகக் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் 1993-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ள பிரசித்து பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார். மலேசியா பற்றி பிரதமர் – அன்வர் இப்ராகிம் தலைநகரம் – கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி நாணயம் – மலேசிய ரிங்கட் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம்  அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலமானது 3-ஆவது முறையாக கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மத்திய அரசு சீர்கெடுத்து வருவதாகவும் அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய அரசு, அமலாக்கத் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியது. அப்போது, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை 3-ஆவது முறையாக நீட்டித்தது சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே வேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகைசெய்த மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கதுறை இயக்குநரகம் பற்றி நிர்வாக இயக்குனர் – சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையகம் –…

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா-தான்சானியா இடையே சொந்த செலாவணியில் வர்த்தகம் இந்தியா – தான்சானியா இடையே சொந்த செலாவணியில் வர்த்தகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஒப்புதலை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அளித்திருக்கிறது. தான்சானியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற ஜெய்சங்கர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அங்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜான் ஜிபார் அதிபர் ஹுசைன் அலி வைனியை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பு RBI இந்திய நாணயத்தில் எல்லை தாண்டிய வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக இந்தியாவில் உள்ள வங்கிகள் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் என்று விரும்புகின்றது. சுமார் 18 நாடுகள் ஏற்கனவே இந்திய வங்கிகளில் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்கியுள்ளன. தான்சானியா பற்றி அதிபர் – சாமியா சுலுஹு ஹசன் தலைநகரம் – டோடோமா நாணயம் – தான்சானிய ஷில்லிங் மாற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெண்கள் மட்டும் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். குடும்ப வன்முறை மற்றும் சொத்துரிமை போன்ற பிரச்சனைகளுக்கு மாற்று தகராறு தீர்வு மன்றமாக கிராம அளவில் பெண்கள் மட்டும் நீதிமன்றங்கள் அமைத்தல் மற்றும் ஆணாதிக்க அமைப்பை மாற்றும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 50 கிராமங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மிஷன் சக்தியின் சம்பல் துணைத் திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இத்திட்டம் நடத்தப்படும். நாரி அதாலத் பற்றி நியாய சகிகள் (சட்ட நண்பர்கள்) என அழைக்கப்படும் உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தால் பரிந்துரைக்கப்படுவார்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாரி அதாலத்தின் தலைவர் எனப்படும் நியாய சகிகளில் முக்கிய நியாய சகி (தலைமை சட்ட நண்பர்) தேர்ந்தெடுக்கப்படுவார். தலைவரின் பதவிக்காலம் பொதுவாக ஆறு மாதங்கள் அல்லது பிறகு புதியவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை. ஒவ்வொரு கிராமத்தின் நாரி அதாலத் (பெண்கள் நீதிமன்றம்) ஏழு முதல் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அதில் பாதி கிராம பஞ்சாயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இருப்பார்கள். மற்ற பாதியில் கிராம மக்களால் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக சேவகர்களும் அடங்குவர். நாரி அதாலத் அரசு திட்டங்கள் மற்றும் பெண்களின் சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

அரசியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குடியரசுத் தலைவருடன் வியத்நாம் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு இந்தியா வந்துள்ள வியத்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் பான்வான் கியாங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். இந்தியாவின் கிழக்கத்திய திட்டத்தில் முக்கியத் தூணாகவும், இந்தோ-பசிபிக் தொலைதூரதை் திட்டத்தில் முக்கிய நாடாகவும் வியத்நாம் நிலவுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த உலகம் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருதரப்பு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா சார்பில் ஏவுகணை தாங்கும் ”ஐஎன்எஸ் கிர்பான்” கப்பலை வியத்நாம் கடற்படைக்கு வழங்குவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குறிப்பு: கடந்த 2022-ஆம் ஆண்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியத்நாம் பயணம் மேற்கோண்டபோது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை மற்றும் பரஸ்பர தளவாட ஆதரவு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் பற்றி ஜனாதிபதி – வோ வான் துவாங் தலைநகரம் – ஹனோய் நாணயம் – வியட்நாமிய டாங் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் பயணத்தின் சிறப்பம்சமாக ஜுன் 22-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். வாஷிங்டனில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் இந்திய வம்சாவளி சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் தெரிவிததள்ளார். தொலைத்தொடர்பு, விண்வெளி, உற்பத்தி, முதலீடு உள்ளிட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அமெரிக்கா பற்றி ஜனாதிபதி – ஜோ பைடன் தலைநகரம் – வாஷிங்டன், டி.சி. நாணயம் – அமெரிக்க டாலர்