அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இருதரப்பு ரயில் இணைப்புப்பாதை தொடக்கம்

  • பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வங்கதேச  பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் முறையே புது தில்லி மற்றும் டாக்காவிலிருந்து அகர்தலா மற்றும் அகௌரா இடையே இருதரப்பு ரயில் இணைப்பு பாதையைத் தொடங்கி வைத்தனர்.
  • அகர்தலா – அகௌரா ரயில் பாதையானது 12.24 கி.மீ நீளம் கொண்டது.
  • இதில், 5.46 கி.மீ திரிபுராவிலும்  மற்றும் 6.78 கி.மீ வங்காளதேசத்தின் பஹ்மன்பரியா மாவட்டத்தின் அகௌராவிலும் உள்ளது.
  • இந்த திட்டம் வடகிழக்கு பிராந்தியத்தில் இணைப்புக்கு முக்கியமானதாக இருக்கும்  மேலும் இது திரிபுராவை சுற்றுலாவின் நுழைவாயிலாக மாற்றும்.
  • இந்த திட்டம் 2013 இல் கையெழுத்திடப்பட்டது.

குறிப்பு

  • திரிபுரா வங்கதேசத்துடன் 856 கிமீ நீளமான சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
  • மேற்கு வங்காளத்திற்குப் பிறகு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது மிக நீண்ட எல்லை இதுவாகும்.

இந்தியா – அமெரிக்கா இடையே ‘2+2’ பேச்சுவார்த்தை

  • இந்தியாவும் அமெரிக்காவும் புதுதில்லியில் ‘2+2’ உரையாடலை நடத்த உள்ளன.
  • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையே ‘2+2’ உரையாடல் நடைபெற உள்ளது.

மற்ற நாடுகளுடனான  2+2 பேச்சுவார்த்தை

  • ஜப்பான்
  • ஆஸ்திரேலியா
  • ரஷ்யா
  • இங்கிலாந்து
Next அரசியல் அறிவியல் >

People also Read