அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

“இந்தியாவில் கல்வி“ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

  • இந்தியாவில் உயர்கல்வி மேற்கொள்ள வரும் வெளிநாட்டு மாணவர்களின் பயணம் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் வகையில் ‘இந்தியாவில் கல்வி (எஸ்ஐஐ)’ என்ற புதிய வலைதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
  • இந்த வலை தளம் மூலமாக இந்தியாவில் உயர் கல்வி பயில்வதற்கான விண்ணப்பப் பதிவு மற்றும் நுழைவு இசைவு (விசா) அனுமதி பதிவு ஆகியவற்றை வெளிநாட்டு மாணவர்கள் எளிதாக மேற்கொள்ள முடியும்.

பொது தேர்தலில் நடக்கும் பிரச்சனைகள்

3 முக்கியத் தேர்தலுக்கு பொது வாக்காளர் பட்டியல்

  • நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான தேர்தலுக்கு பொது வாக்காளர் பட்டியலை (ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியல்) அறிமுகப்படுத்த சட்ட ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத் துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
  • இந்த முன்மொழிவு பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர் மற்றும் சட்டம் – நீதி தொடர்பான துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு ஆய்வில் உள்ளது.
  • நாட்டில் தற்போதுள்ள தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் வகையிலும், தேர்தல் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான செயல்முறையிலும் இந்த முன்மொழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ECI பற்றி

  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும்.
  • சட்டப்பிரிவு 324 – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், இந்திய ஜனாதிபதியின் அலுவலகம் மற்றும் இந்திய துணை ஜனாதிபதியின் அலுவலகம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம்.
Next அரசியல் அறிவியல் >

People also Read