Tag: மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள்

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியா – பூடான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானின் ஐந்தாவது மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்தார். முக்கிய முடிவுகள் அசாமில் உள்ள கெலேபு மற்றும் கோக்ரஜார் இடையே 58 கிமீ குறுக்கு ரயில் இணைப்பு இந்தியாவால் கட்டப்பட உள்ளது. பூட்டானில் உள்ள சாம்ட்சே மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பனார்ஹட் இடையே சுமார் 18 கிமீ தூரத்திற்கு இரண்டாவது ரயில் இணைப்புப் பாதையை நிறுவுதல். தாத்கிரியில் (அஸ்ஸாம்) ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை  (ICP) நிறுவுதல் பூடான் மற்றும் அஸ்ஸாம் எல்லையில் உள்ள கெலெபுவில் ஸ்மார்ட் சிட்டியை நிறுவுதல். மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் டெல்லியில் மீண்டும் ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டம் புது தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நவம்பர் 13 முதல் 20 வரை ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டத்தை அமல்படுத்துவதாக அரசு  அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்பை விட சுமார் 18 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியில் காற்று மாசுபாடு "கடுமையான" பிரிவில் தொடர்கிறது . இத்திட்டம்  முதன் முதலில் 2016இல் செயல்படுத்தப்பட்டது.

அரசியல் அறிவியல்

மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் ஜன்தன் யோஜனாவின் 9 ஆண்டுகள் ஆகஸ்ட் 28, 2023 அன்றுடன் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனாவின் (PMJDY) ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரதமர் ஜன் தன் யோஜனா பற்றி அறிவிப்பு - 15 ஆகஸ்ட் 2014 வெளியீடு – 28 ஆகஸ்ட் 2014 நிதிச் சேவை அணுகலை உறுதி செய்வதற்கும், நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான தேசியத் திட்டம். நோக்கங்கள்: மலிவு விலையில் பொருளாதார தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அணுகுவதை உறுதி செய்தல். செலவைக் குறைப்பதற்கும், பரவலான அணுகலுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

அரசியல் அறிவியல்

மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 31,000 அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 17 லட்சம் மாணவர்கள் பயனடையயிருக்கின்றனர். திட்டம் பற்றி தொடங்கப்பட்டது - செப்டம்பர் 15, 2022 மதுரை குறிக்கோள் - அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்குதல் நோக்கம் - பசியைக் குறைத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பது, குழந்தைகளின் சராசரி உயரத்தை அடைதல், இளம் பருவத்தினரின் எடை குறைவதைத் தடுப்பது, இரத்த சோகை மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டைத் தடுப்பது தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டத்தின் பரிணாமம் செப்டம்பர் 16, 1920 - சர் பி.டி. தியாகராயர் (மெட்ராஸ் மாநகராட்சி மேயர்) - ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு திட்டம். 1957 – K.காமராஜர் - மதிய உணவுத் திட்டம் புத்துயிர் பெற்றது. 1982 – M.G.ராமச்சந்திரன் - சத்துணவுத் திட்டம். 1989 – மு. கருணாநிதி - சத்துணவுடன் முட்டை பரிமாறப்பட்டது. 2013 - ஜெ ஜெயலலிதா கலவை சோற்றினை உணவுப் பட்டியலில் சேர்த்தார். 2022 – மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர் இலவச காலை உணவுத் திட்டம்.