Tag: பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

அரசியல் அறிவியல்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் பாராளுமன்றத்தில் இருந்து எம்பி பதவிநீக்கம் திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை  நெறிமுறைக் குழு "நெறிமுறையற்ற நடத்தை" மற்றும் "சபையை அவமதித்ததற்காக" அவரை  எம்.பி.பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைத்தது. நெறிமுறைகள் குழு மக்களவை உருவாக்கம்  - 2000 உறுப்பினர்கள் 15 (மக்களவையில் இருந்து) பரிந்துரை  - சபாநாயகர் மாநிலங்களவை உருவாக்கம் – 1997 உறுப்பினர்கள் 10 (மாநிலங்களவையில் இருந்து) பரிந்துரை – மாநிலங்களவை தலைவர் பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் பேக்கேஜிங்கில் சணலின்  உபயோகம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 -24 ஆம் ஆண்டிற்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாக உபயோகப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு அன்று ஒப்புதல் அளித்தது. 2023-24 ஆம் ஆண்டிற்கான கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகள் உணவு தானியங்களில் 100% முழுமையாகவும் மற்றும் சர்க்கரையில் 20% கட்டாயமாக சணல் பைகளில் பேக்கிங் செய்ய வழிவகுக்கிறது. தற்போதைய முன்மொழிவில் உள்ள ஒதுக்கீடு விதிமுறைகள் இந்தியாவில் சணல் மூலப்பொருட்கள் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை மேலும் பாதுகாக்கும்.

அரசியல் அறிவியல்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் பாராளுமன்றத்தில் இருந்து எம்பி பதவிநீக்கம் திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை  நெறிமுறைக் குழு "நெறிமுறையற்ற நடத்தை" மற்றும் "சபையை அவமதித்ததற்காக" அவரை  எம்.பி.பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைத்தது. நெறிமுறைகள் குழு மக்களவை உருவாக்கம்  - 2000 உறுப்பினர்கள் 15 (மக்களவையில் இருந்து) பரிந்துரை  - சபாநாயகர் மாநிலங்களவை உருவாக்கம் – 1997 உறுப்பினர்கள் 10 (மாநிலங்களவையில் இருந்து) பரிந்துரை – மாநிலங்களவை தலைவர் பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் பேக்கேஜிங்கில் சணலின்  உபயோகம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 -24 ஆம் ஆண்டிற்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாக உபயோகப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு அன்று ஒப்புதல் அளித்தது. 2023-24 ஆம் ஆண்டிற்கான கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகள் உணவு தானியங்களில் 100% முழுமையாகவும் மற்றும் சர்க்கரையில் 20% கட்டாயமாக சணல் பைகளில் பேக்கிங் செய்ய வழிவகுக்கிறது. தற்போதைய முன்மொழிவில் உள்ள ஒதுக்கீடு விதிமுறைகள் இந்தியாவில் சணல் மூலப்பொருட்கள் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை மேலும் பாதுகாக்கும்.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் பசுமை ஹைட்ரஜன் தரநிலைகளை வெளியிட்டது மத்திய அரசு தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், இந்தியாவிற்கான பசுமை ஹைட்ரஜன் தரநிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறப்பம்சங்கள் ஹைட்ரஜனை 'பசுமை' என வகைப்படுத்துவதற்கு, புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் உமிழ்வு வரம்புகளை, தரநிலைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. 'பசுமை ஹைட்ரஜன்' வரையறையின் நோக்கம் மின்னாற்பகுப்பு அடிப்படையிலான மற்றும் உயிரி அடிப்படையிலான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகள் இரண்டையும் உள்ளடக்கியது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திட்டங்களுக்கான கண்காணிப்பு, சரிபார்ப்பு மற்றும் சான்றிதழுக்கான ஏஜென்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக மின்சக்தி அமைச்சகத்தின் ஆற்றல் திறன் பணியகம் (BEE) நோடல் அமைப்பாக இருக்கும். குறிப்பு தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் - 4 ஜனவரி 2022 பிரித்தெடுக்கும் முறைகளின் அடிப்படையில் ஹைட்ரஜன் வகைகள் பழுப்பு ஹைட்ரஜன்: நிலக்கரி அல்லது லிக்னைட் வாயு, இயற்கை எரிவாயு அல்லது மீத்தேன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீல ஹைட்ரஜன்: இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி வாயுவாக்கம் மூலம் கார்பன் பிடிப்பு சேமிப்பு (CCS) அல்லது கார்பன் பிடிப்பு பயன்பாடு (CCU) தொழில்நுட்பங்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன்: புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் நீரின் மின்னாற்பகுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் 'சமுத்ரா' செயலி புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) கீழ் உள்ள இந்திய கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS), கடல் தரவு வள ஆலோசனைகளுக்கான (SAMUDRA) கடல் பயனர்களுக்கு ஸ்மார்ட் அணுகல் என்ற புதிய மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது. கடல் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் சமுத்ரா செயலி விரிவான தகவல்களை வழங்குகிறது. இது கடல் பயணிகள் மற்றும் மீனவ சமூகம் இருவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் கைவினை தொழிலாளர்களுக்கு விஸ்வகர்மா யோஜனா திட்டம் நூற்றாண்டு காலமாக பாரம்பரிய திறன்களில் ஈடுபட்டுள்ள பல்வேறு வகையான கைவினை தொழிலாளர்களுக்கு 'பிரதமரின் விஸ்வகர்மா கௌஷல் சம்மான்' திட்டம் வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் நெசவாளர்கள், பொற்கொல்லர்கள், கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பலன் அடைவர். குறிப்பு  விவசாயிகளுக்கான நலத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதித் திட்டம் போன்றவற்றின் வரிசையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் மருந்து நிறுவனங்களின் சான்றிதழுக்கான காலக்கெடு இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் சிறந்த தர நிர்வாகத்தை கொண்டு வர, சுகாதார அமைச்சகம் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஆறு மாதங்களும், பெரிய நிறுவனங்களுக்கு 12 மாதங்களும் உலக சுகாதார அமைப்பு-நல் உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) சான்றிதழ் பெறுவதற்கு அவகாசம் அளித்துள்ளது. மருந்து பொருட்கள், உற்பத்தி முறைகள், இயந்திரங்கள், செயல்முறைகள், பணியாளர்கள் மற்றும் வசதி அல்லது சூழல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தி தரத்தை கொண்டு வரும் கட்டாயத் தர நிர்ணய கொள்கைகளை GMP கொண்டுள்ளது. குறிப்பு GMP அமைப்பு முதன்முதலில் 1988-ல் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள். 1945-ன் அட்டவணை M-ல் இணைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து உடல்களை கொண்டு வர e-clearance portal உடல்களை எடுத்துச் செல்வதில் தாமதத்தைத் தவிர்க்க, சுகாதார அமைச்சகம் மின்-அனுமதி இணைய முகப்பினை (e-clearance portal) தொடங்குவதாக அறிவித்தது. இதன்படி டெல்லி விமான நிலையம் நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் நோடல் மையமாக செயல்படுவதுடன், இச்செயல்முறைக்கு 48 மணிநேரத்தில் ஒப்புதலை வழங்கும். இது பொதுமக்களுக்கு, சர்வதேச எல்லைகள் வழியாக, மனித உடல்களை எளிதாகவும் சரியான நேரத்திலும் கொண்டு செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் ஓபிசி ஆணையம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தொடர்பாக அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம், குடியரசுத்தலைவரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களை உள்பிரிவுகளாக வகைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தகுதிகள், அளவீடுகள் குறித்த பரிந்துரைகளை அளிக்கும் வகையில் தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜி.ரோகிணி தலைமையில் ஓபிசி ஆணையம் கடந்த 2017-இல் அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 13 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் ரோகிணி ஆணையத்தின் அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓபிசி பட்டியலில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே சமச்சீரற்ற முறையில் இடஒதுக்கீட்டின் பயன்கள் சென்றடைவது குறித்து ஆராய்வதையும் இந்த ஆணையம் முக்கியப் பணிகளாக கொண்டிருந்தது. OBC கமிஷன் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 1953 – காக்கா காலேல்கர். இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 1979 – பி.பி. மண்டல். இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு, 1992. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC), 1993. 123வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2017. மசோதா ஆகஸ்ட் 2018 இல் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, NCBC க்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. பிறப்பு, இறப்பு பதிவு மசோதா கல்வி நிறுவனங்கள், அரசு பணிகளில் சேருவது முதல், ஓட்டுனர் உரிமம் எடுப்பது வரையிலான அனைத்து விதமான அரசு சார்ந்த பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, பள்ளி, கல்லுாரிகளில் சேருவது, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் வாங்குவது, அரசு வேலைகளில் சேருவது போன்றவற்றுக்கு பிறந்த ஊர் மற்றும் தேதிக்கான ஒரே ஆவணமாக, பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும். இந்த திருத்தத்தின் படி, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், இந்த பிறப்பு, இறப்பு தரவுகளை, சேவை திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும். மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பட்டியல், ஆதார் எண், ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றுக்கு அரசு பயன்படுத்த முடியும். மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஆவணங்களை பதிவு செய்யும் நடைமுறையை இந்த மசோதா எளிதாக்குகிறது. மேலும், அனைத்து மருத்துவமனைகளும் இறப்பு குறித்த சான்றிதழை பதிவாளரிடம் வழங்குவதை இந்த சட்ட திருத்தம் கட்டாயமாக்குகிறது.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் வாட்ஸ்-ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் கடந்த மே 17- ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்கள் கைப்பேசி வாட்ஸ் ஆப் மூலம் 8300086000 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மொழி, புறப்படும் இடம், சேரும் இடம், டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஜிபே, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இந்நிலையில், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரத்து 468 பேர் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MLACDS) செயல்படுத்துவதற்கான நிதி, ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் MLACDS செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பு மாநில அரசு ஏப்ரல் 2020ல், எம்எல்ஏசிடிஎஸ்-ன் கீழ் ஒதுக்கீட்டை 32 கோடியாக ஒதுக்கீட்டைக் குறைத்து, எம்எல்ஏசிடிஎஸ் நிதியிலிருந்து 235 கோடியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு, கோவிட்-19-ஐக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும், பொருட்களையும் வாங்குவதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு நலத்திட்டங்கள் “நீடுழி வாழ்க“ திட்டம் நாட்டின் கடைக்கோடி வழ உள்ளவர்களுக்கு அரசின் அனைத்து சுகாதார திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், நீடூழி வாழ்க (ஆயுஷ்மான் பவ) திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சுகாதாரத் திட்டங்களின் பலன்கள் பயனாளிகளை சென்றடையும் வகையில் கிராம அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரசாரத்தை கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழுக்கள் மேற்கொள்ள உள்ளன. இதுமட்டுமின்றி சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மூலம் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழித்தல், ஊட்டச்சத்து, குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், நோய்த்தடுப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பிரசாரம் உதவும். இந்த பிரசாரத்தின்போது ஒவ்வொரு கிராமத்திலும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் விநியோகிக்கப்படும். அத்துடன் அந்தத் திட்டத்தின் கீழ். அப்பகுதிகளில் உள்ள எந்தெந்த மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன, என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வழங்கப்படும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் விநியோகம், நோய்த்தடுப்பு, தொற்ற நோய்கள் பரிசோதனை உள்ளிட்டவற்றில் 100 சதவீத இலக்கை அடைவதும் திட்டத்தின் அங்கமாகும்.

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அபராதத் தொகையை நூலகத்துக்கு வழங்க உத்தரவு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது, மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இதனை விதித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர், ‘தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தொடங்க வேண்டும்.  நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தவேண்டும்’ என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும்’ என்று சொல்வார்கள். அந்த மூதுரையை, உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய அரசியல் அமைப்புகள் மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மாற்றியமைப்பு மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவை அவையின் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் மாற்றியமைத்தார். இந்த மாற்றத்தின்படி பி.டி.உஷா, எஸ்.பங்கோன் கொன்யக், பௌசியா கான், சுலதா டியோ, வி.விஜய்சாய் ரெட்டி, சுன்ஷியாம் திவாரி.எல்.ஹனுமந்தியா, சுகெந்து சேகர் ராய் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் புதிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை விதிகளின் படி, அவையில் தலைவர் அல்லது துணைத் தலைவர் இல்லாத நிலையிலும் அவர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதன் அடிப்படையிலும் அவையை தொடர்ந்து வழி நடத்துவதற்காக அவை உறுப்பினர்களிலிருந்து அதிகபட்சம் 6 உறுப்பினர்களைக் கொண்ட இத்தகைய துணைத் தலைவர்கள் குழு, அவைத் தலைவர் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படுவது நடைமுறை. இது குறித்து ஜகதீப் தன்கர் கூறுகையில், 'புதிய துணைத் தலைவர்கள் குழுவில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறேன்’ என்றார். ராஜ்யசபா பற்றி தலைவர் (இந்திய துணை ஜனாதிபதி) - ஜகதீப் தன்கர் வேறு பெயர்கள் - நிரந்தர அவை/ மாநிலங்கள் அவை/ மேலவை அதிகபட்ச உறுப்பினர் வரம்பு - 250 உறுப்பினர்கள் தற்போதைய எண்ணிக்கை - 245 உறுப்பினர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் -233 குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் - 12 (கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்புக்காக) பொது விழிப்புணர்வு மற்றும் நிர்வாகம் பொது சிவில் சட்டம் ”குடும்ப சட்ட சீர்திருத்தங்கள்” குறித்து 2018-இல் 21-ஆவது சட்ட ஆணையம் ஆலோசனைகளை நடத்தியது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் அது குறித்த அறிக்கையை சட்ட ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் பொது மக்கள், மத அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.  பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை கவனத்தில் கொண்டும் புதிய ஆலோசனைகளை 22-ஆவது சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  முன்னதாக பொது…

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளர்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் எண்மமயமாக்கலை ஊக்குவிக்க, எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை (டிஐஎல்ஆர்எம்பி) மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதில் சிறப்பாகப் பணியாற்றும் வருவாய், பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ”பூமி சம்மான் விருது” ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். இது பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்படும்போது நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த உதவும். நிலம் தொடர்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிக்கப்படுவதில்  நன்மைகள். குறிப்பாக மின்–நீதிமன்றங்களோடு இணைக்கப்படும்போது, நிலம் தொடர்பான தாவாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும். நாடு முழுவதும் 94 சதவீதம் எண்ம மயமாக்கலை நில வளத் துறை முடித்துள்ளது. இதை 2024 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீன மாயமாக்கல் திட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நிலத்திட்டங்கள் ”நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம் நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி” திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்து இடை நின்ற மாணவர்களில் 15,713 மாணவர்கள் கண்டறியப்பட்டு கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி திட்டம்” மூன்று கட்டங்களாக நடத்தப் பட்டது. அதில் பள்ளிக் கல்வித் துறையால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலம் பிரிவு முகாம்களுக்குத் திரட்டப்பட்டனர். சார் ஆட்சியரின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகியோர் முகாம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தனர். இந்த முகாம்களில், வங்கிகள் தங்களிடம் உள்ள கல்விக் கடன் திட்டங்களை விளக்கியதுடன் பல்வேறு மாவட்டங்களில் உடனடிக் கடன் வழங்க ஏற்பாடு செய்தனர்.

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் மானிய விலையில் ”பாரத் பருப்பு” ”பாரத் பருப்பு” என்ற மானிய விலையிலான கடலைப் பருப்பு விற்பனையை மத்திய உணவு மற்றம் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் தொடங்கி வைத்தார். ஒரு கிலோ கடலைப் பருப்பு ரூ.60 மானிய விலையிலும் 30 கிலோ பருப்பு கிலோ ரூ.55 மானிய விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.