Tag: பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

அரசியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குடியரசுத் தலைவருடன் வியத்நாம் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு இந்தியா வந்துள்ள வியத்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் பான்வான் கியாங், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். இந்தியாவின் கிழக்கத்திய திட்டத்தில் முக்கியத் தூணாகவும், இந்தோ-பசிபிக் தொலைதூரதை் திட்டத்தில் முக்கிய நாடாகவும் வியத்நாம் நிலவுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த உலகம் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருதரப்பு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியா சார்பில் ஏவுகணை தாங்கும் ”ஐஎன்எஸ் கிர்பான்” கப்பலை வியத்நாம் கடற்படைக்கு வழங்குவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். குறிப்பு: கடந்த 2022-ஆம் ஆண்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியத்நாம் பயணம் மேற்கோண்டபோது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மை குறித்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை மற்றும் பரஸ்பர தளவாட ஆதரவு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது. வியட்நாம் பற்றி ஜனாதிபதி – வோ வான் துவாங் தலைநகரம் – ஹனோய் நாணயம் – வியட்நாமிய டாங் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் பயணத்தின் சிறப்பம்சமாக ஜுன் 22-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். வாஷிங்டனில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் இந்திய வம்சாவளி சமூகத்தின் முக்கியத் தலைவர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் தெரிவிததள்ளார். தொலைத்தொடர்பு, விண்வெளி, உற்பத்தி, முதலீடு உள்ளிட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தைகளை நடத்துவார். அமெரிக்கா பற்றி ஜனாதிபதி – ஜோ பைடன் தலைநகரம் – வாஷிங்டன், டி.சி. நாணயம் – அமெரிக்க டாலர்