Tag: வழிபாட்டுத் தலங்கள் சட்ட வழக்கு

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  மலேசியாவில் ஹெச்ஏஎல் பிராந்திய அலுவலகம் திறப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏல்) பிராந்திய அலுவலகத்தை, கோலாலம்பூரில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அந்த அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தொழில் சார் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாகக் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் 1993-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ள பிரசித்து பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார். மலேசியா பற்றி பிரதமர் – அன்வர் இப்ராகிம் தலைநகரம் – கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி நாணயம் – மலேசிய ரிங்கட் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம்  அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலமானது 3-ஆவது முறையாக கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மத்திய அரசு சீர்கெடுத்து வருவதாகவும் அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய அரசு, அமலாக்கத் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியது. அப்போது, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை 3-ஆவது முறையாக நீட்டித்தது சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே வேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகைசெய்த மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கதுறை இயக்குநரகம் பற்றி நிர்வாக இயக்குனர் – சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையகம் –…