Tag: சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் நியாயமற்ற பாலின சொற்றொடர் கையேடு: உச்சநீதிமன்றம் வெளியீடு நியாயமற்ற பாலின வார்த்தைகள் மற்றும் அதற்கான மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் அடங்கிய கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. வழக்கு விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளில் பெண்கள் குறித்த ஒரே மாதிரியான சொற்றொடர்களை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு இந்தக் கையேடு உதவும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார். இதன் மூலமாக, மனுக்கள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து சட்ட ஆவணங்களிலும் இந்த மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர் பயன்பாடு நடைமுறைக்கு வரும். நியாயமான, சமத்துவ தீர்ப்பை நீதிபதிகள் எழுதுவதை இந்தக்கையேடு உறுதிப்படுத்தும். முக்கிய அம்சங்கள் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்குப் பதிலாக 'பெண்' என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவேண்டும். ஏற்கெனவே உள்ள சர்ச்சை வார்த்தைகளுக்கு பதிலாக "பாலியல் தொழிலாளர்” என்ற சொற்றொடரையும் திருமண உறவைக் கடந்து ஆணுடன் பாலியல் உறவு கொண்டிருக்கும் பெண் என்ற சொற்றொடரடையும், 'திருமணம் செய்துகொள்ளாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தை' என்ற சொற்றொடரையும் பயன்படுத்த இந்தக் கையேடு பரித்துரைத்துள்ளது.  'ஈவ் டீசிங்' என்ற வார்த்தைக்கு மாற்றாக “தெரு பாலியல் துன்புறுத்தல்“ என்ற சொற்றொடரை பயன்படுத்தவும் இந்தக் கையேடு பரிந்துரைத்துள்ளது. ஆங்கிலத்தில் 'ஹவுஸ் வொய்ஃப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஹோம் மேக்கர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் பரித்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி நிறுவப்பட்டது - அக்டோபர் 1, 1937 இந்திய தலைமை நீதிபதி - தனஞ்சய ஒய். சந்திரசூட் மொத்த எண்ணிக்கை - 34 (33+1) அரசியலமைப்பு விதிகள் - சரத்து 124 - 147 மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டம் இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.20,000 கோடியை வழங்க உள்ளது. இந்தியா முழுவதும் 169 நகரங்களில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அபராதத் தொகையை நூலகத்துக்கு வழங்க உத்தரவு ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது, மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இதனை விதித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர், ‘தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தொடங்க வேண்டும்.  நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தவேண்டும்’ என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 'ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும்’ என்று சொல்வார்கள். அந்த மூதுரையை, உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய அரசியல் அமைப்புகள் மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மாற்றியமைப்பு மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவை அவையின் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் மாற்றியமைத்தார். இந்த மாற்றத்தின்படி பி.டி.உஷா, எஸ்.பங்கோன் கொன்யக், பௌசியா கான், சுலதா டியோ, வி.விஜய்சாய் ரெட்டி, சுன்ஷியாம் திவாரி.எல்.ஹனுமந்தியா, சுகெந்து சேகர் ராய் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் புதிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை விதிகளின் படி, அவையில் தலைவர் அல்லது துணைத் தலைவர் இல்லாத நிலையிலும் அவர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதன் அடிப்படையிலும் அவையை தொடர்ந்து வழி நடத்துவதற்காக அவை உறுப்பினர்களிலிருந்து அதிகபட்சம் 6 உறுப்பினர்களைக் கொண்ட இத்தகைய துணைத் தலைவர்கள் குழு, அவைத் தலைவர் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படுவது நடைமுறை. இது குறித்து ஜகதீப் தன்கர் கூறுகையில், 'புதிய துணைத் தலைவர்கள் குழுவில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறேன்’ என்றார். ராஜ்யசபா பற்றி தலைவர் (இந்திய துணை ஜனாதிபதி) - ஜகதீப் தன்கர் வேறு பெயர்கள் - நிரந்தர அவை/ மாநிலங்கள் அவை/ மேலவை அதிகபட்ச உறுப்பினர் வரம்பு - 250 உறுப்பினர்கள் தற்போதைய எண்ணிக்கை - 245 உறுப்பினர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் -233 குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் - 12 (கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்புக்காக) பொது விழிப்புணர்வு மற்றும் நிர்வாகம் பொது சிவில் சட்டம் ”குடும்ப சட்ட சீர்திருத்தங்கள்” குறித்து 2018-இல் 21-ஆவது சட்ட ஆணையம் ஆலோசனைகளை நடத்தியது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் அது குறித்த அறிக்கையை சட்ட ஆணையம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் பொது மக்கள், மத அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது.  பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை கவனத்தில் கொண்டும் புதிய ஆலோசனைகளை 22-ஆவது சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  முன்னதாக பொது…

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் மௌனத்திற்கான உரிமை உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மௌனமாக இருக்க உரிமை உண்டு என்றும் புலனாய்வாளர்கள் அவர்களைப் பேசவோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளது. மௌனம் காப்பதற்கான உரிமையானது சட்டப்பிரிவு 20(3)-ல் இருந்து வெளிப்படுகிறது. இது தனக்கு எதிராக தானே சாட்சியாக இருக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது. இந்த பாதுகாப்பு கிரிமினல் நடவடிக்கைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, சுங்கச் வரிச்சட்டம், 1962 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999, ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் நபருக்க இந்த உரிமை இல்லை.  நந்தினி சத்பதி எதிர். பி.எல். டானி வழக்கு, ”காவல் நிலைய எல்லைக்குள் ஒரு நபரை கேள்விக்கு பதிலளிக்க கட்டாயப்படுத்துவது பிரிவ 20(3) ஐ மீறுவதாக இருக்கலாம்” என்ற உச்ச நீதிமன்றம் கூறியது. பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் சாலை விபத்தில் உயிர் காக்க உதவினால் வெகுமதி சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிபுரிவோருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரச வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசால் ஏற்கெனவே வெகுமதியாக வழங்கும் 5,000 ரூபாயுடன், மாநில அரச சார்பில் ரூ.5,000 சேர்த்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உதவும் வகையில், அவர்களை பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  மலேசியாவில் ஹெச்ஏஎல் பிராந்திய அலுவலகம் திறப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏல்) பிராந்திய அலுவலகத்தை, கோலாலம்பூரில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அந்த அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தொழில் சார் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாகக் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் 1993-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ள பிரசித்து பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார். மலேசியா பற்றி பிரதமர் – அன்வர் இப்ராகிம் தலைநகரம் – கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி நாணயம் – மலேசிய ரிங்கட் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம்  அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலமானது 3-ஆவது முறையாக கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மத்திய அரசு சீர்கெடுத்து வருவதாகவும் அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய அரசு, அமலாக்கத் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியது. அப்போது, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை 3-ஆவது முறையாக நீட்டித்தது சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே வேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகைசெய்த மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கதுறை இயக்குநரகம் பற்றி நிர்வாக இயக்குனர் – சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையகம் –…

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இடையக மண்டலங்கள் குறித்த உத்தரவை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட காடுகள், தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களைச் சுற்றி குறைந்தபட்சம் ஒரு கிலோமீட்டர் கட்டாய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் (ESZ)  இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்துள்ளது. “தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்குள் மற்றும் அத்தகைய தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் பரப்பளவில் சுரங்கம் தோண்டுவதை அனுமதிக்க முடியாது“ என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் புகையிலைப் பொருள்களுக்கு உடனடி தடை இல்லை தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் குட்கா, பான், மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடைவிதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். FSSAI உணவுப் பாதுகாப்பு தரநிலைச் சட்டம். 2006ன் கீழ் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சட்டப்பூர்வ அமைப்பாகும். அமைச்சகம் - சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம் தலைமையிடம் – டெல்லி