அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

இந்தியா – பூடான்

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பூட்டானின் ஐந்தாவது மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்தார்.

முக்கிய முடிவுகள்

  • அசாமில் உள்ள கெலேபு மற்றும் கோக்ரஜார் இடையே 58 கிமீ குறுக்கு ரயில் இணைப்பு இந்தியாவால் கட்டப்பட உள்ளது.
  • பூட்டானில் உள்ள சாம்ட்சே மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள பனார்ஹட் இடையே சுமார் 18 கிமீ தூரத்திற்கு இரண்டாவது ரயில் இணைப்புப் பாதையை நிறுவுதல்.
  • தாத்கிரியில் (அஸ்ஸாம்) ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை  (ICP) நிறுவுதல்
  • பூடான் மற்றும் அஸ்ஸாம் எல்லையில் உள்ள கெலெபுவில் ஸ்மார்ட் சிட்டியை நிறுவுதல்.

மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

டெல்லியில் மீண்டும் ஒற்றைப்படை-இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டம்

  • புது தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க நவம்பர் 13 முதல் 20 வரை ஒற்றைப்படை இரட்டைப்படை வாகன சுழற்சி திட்டத்தை அமல்படுத்துவதாக அரசு  அறிவித்துள்ளது.
  • டெல்லியில் காற்று மாசுபாடு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த வரம்பை விட சுமார் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியில் காற்று மாசுபாடு “கடுமையான” பிரிவில் தொடர்கிறது .
  • இத்திட்டம்  முதன் முதலில் 2016இல் செயல்படுத்தப்பட்டது.
Next அரசியல் அறிவியல் >

People also Read