அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

பிரதமர் பிரான்ஸ் பயணம்

  • பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகர் பாரீஸில் (ஜுலை 14) நடைபெறுகின்றன.
  • அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமர் மோடி பிரான்ஸுக்கு புறப்படுகிறார்.
  • தனது இரு நாள் பிரான்ஸ் பயணத்தின்போது, அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய பேரவையின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தப் பயணத்தின்போது பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்கார்பியன் நீர்முழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும்.

பிரான்ஸ் பற்றி

  • தலைவர் – இம்மானுவேல் மேக்ரான்
  • பிரதமர் – எலிசபெத் போர்ன்
  • தலைநகரம் – பாரிஸ்
  • நாணயம் – (பிரெஞ்சு) பிராங்க்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

பணிபுரியும் மகளிருக்கு அரசு விடுதி

  • பணிபுரியும் பெண்களுக்காக தமிழக அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
  • ”தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்குதல், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
  • இதன் ஒரு பகுதியாக அடையாறு, சாஸ்திரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.
  • இந்த விடுதியில் 98 படுக்கை வசதியுடன் ஒருவர், இருவர், நால்வர், ஆறு பேர் தங்கும் வகையில் அறை வசதிகள் உள்ளன.
  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, இலவச வைஃபை, பயோமெட்ரிக் பதிவேடு வசதி, பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் உள்ளன.
  • இந்த விடுதிக்கு http://www.tnwwhcl.in/ என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Next அரசியல் அறிவியல் >

People also Read