வரலாறு

முக்கிய தினங்கள் 

தேசிய ஊட்டச்சத்து வாரம் (பாரத ஊட்டச்சத்து வாரம் என்றும் அழைக்கப்படுகிறது)

  • தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரை அனுசரிக்கப்படுகிறது
  • குறிக்கோள் – மனித உடலுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  • கருத்துரு 2023 – “அனைவருக்கும் மலிவு விலையில் ஆரோக்கியமான உணவு”.

குறிப்பு

  • இந்திய அரசு 1982 முதல் தேசிய ஊட்டச்சத்து வாரத்தை நடத்தி வருகிறது.

பாதுகாப்பு

INS மகேந்திரகிரி

  • INS மகேந்திரகிரியை சுதேஷ் தன்கர் மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸில் நாட்டுக்கு அர்பணித்தார் .
  • மகேந்திரகிரி என்பது ப்ராஜெக்ட் 17A போர்க் கப்பல்களின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட இந்திய கடற்படையின் இறுதி மற்றும் 7வது போர் கப்பல் ஆகும்.
  • இது ஒடிசாவில் அமைந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை உச்சியின் பெயரால் அழைக்கப்படுகிறது

புராஜக்ட்  17 ஆல்பா பற்றி

  • அறிமுகம் – 2019
  • அதிநவீன  வழிகாட்டுதல்-ஏவுகணை போர் கப்பல்களின் வரிசையை உருவாக்குதல் (மொத்தம் 7 கப்பல்கள்).
  • இரண்டு நிறுவனங்களால் கட்டப்பட்டது
  • மும்பை – மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மூலம் நான்கு கப்பல்கள்
  • கொல்கத்தா – கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) மூலம் மூன்று கப்பல்கள்.
  • மற்ற ஆறு போர்க்கப்பல்கள் 
  • நீலகிரி – 2019
  • ஹிம்கிரி – 2020
  • உதயகிரி – 2022
  • துனகிரி – 2022
  • தாராகிரி – 2022
  • விந்தியகிரி – 2023

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

65வது ராமன் மகசேசே விருது 2023

  • அஸ்ஸாமில் உள்ள கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (CCHRC) இயக்குநரான அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் ஆர்.ரவி கண்ணன் 2023 ஆம் ஆண்டிற்கான ராமன் மகசேசே விருதாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மக்களை மையப்படுத்திய மற்றும் ஏழை மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு மூலம் அசாமில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர்.

மற்ற வெற்றியாளர்கள்

  • கோர்வி ரக்ஷந்த் – பங்களாதேஷ்
  • யூஜெனியோ லெமோஸ் – திமோர்-லெஸ்டே
  • மிரியம் கரோனல்-ஃபெரர் – பிலிப்பைன்ஸ்

ராமன் மகசேசே விருது பற்றி

  • உருவாக்கம் – ஆகஸ்ட் 31, 1957
  • பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வழங்கப்படுகிறது.
  • ஆசியாவின் மக்களுக்குச் சேவை செய்வதில் காட்டப்படும் மகத்துவத்தை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுகிறது. 
  • ஆறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
  • அரசு சேவை
  • பொது சேவை
  • சமூக தலைமை
  • பத்திரிகை, இலக்கியம் மற்றும் ஆக்கப்பூர்வமான தொடர்பு கலைகள்
  • அமைதி மற்றும் சர்வதேச புரிதல்
  • அவசர தலைமை

குறிப்பு

  • 1958 இல் சமூகத் தலைமைப் பிரிவின் கீழ் ராமன் மகசேசே விருதை வென்ற முதல் இந்தியர் ஆச்சார்யா வினோபா பாவே.

நியமனங்கள்

இரயில்வே வாரியத்தின் தலைவரான  முதல் பெண்மணி

  • இரயில்வே அமைச்சகத்தின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அனில் குமார் லஹோட்டிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரயில்வே வாரியத்தின் 118 வருட வரலாற்றில் (1905 முதல்) தலைவரான  முதல் பெண்மணி ஆவார்.

ரயில்வே வாரியத்தின் வரலாறு

  • சர் தாமஸ் ராபர்ட்சன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1901 இல் உருவாக்கப்பட்டது.
  • 1905 இல், கர்சன் பிரபுவின் அரசாங்கத்தால் அதன் அதிகாரங்கள் முறைப்படுத்தப்பட்டன.
Next வரலாறு >

People also Read