Tag: பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் மௌனத்திற்கான உரிமை உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மௌனமாக இருக்க உரிமை உண்டு என்றும் புலனாய்வாளர்கள் அவர்களைப் பேசவோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளது. மௌனம் காப்பதற்கான உரிமையானது சட்டப்பிரிவு 20(3)-ல் இருந்து வெளிப்படுகிறது. இது தனக்கு எதிராக தானே சாட்சியாக இருக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது. இந்த பாதுகாப்பு கிரிமினல் நடவடிக்கைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, சுங்கச் வரிச்சட்டம், 1962 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999, ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் நபருக்க இந்த உரிமை இல்லை.  நந்தினி சத்பதி எதிர். பி.எல். டானி வழக்கு, ”காவல் நிலைய எல்லைக்குள் ஒரு நபரை கேள்விக்கு பதிலளிக்க கட்டாயப்படுத்துவது பிரிவ 20(3) ஐ மீறுவதாக இருக்கலாம்” என்ற உச்ச நீதிமன்றம் கூறியது. பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் சாலை விபத்தில் உயிர் காக்க உதவினால் வெகுமதி சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிபுரிவோருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரச வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசால் ஏற்கெனவே வெகுமதியாக வழங்கும் 5,000 ரூபாயுடன், மாநில அரச சார்பில் ரூ.5,000 சேர்த்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உதவும் வகையில், அவர்களை பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரதமர் பிரான்ஸ் பயணம் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகர் பாரீஸில் (ஜுலை 14) நடைபெறுகின்றன. அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமர் மோடி பிரான்ஸுக்கு புறப்படுகிறார். தனது இரு நாள் பிரான்ஸ் பயணத்தின்போது, அதிபர் மேக்ரான், பிரதமர் எலிசபெத் போர்ன், செனட் மற்றும் பிரான்ஸ் தேசிய பேரவையின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஒப்பந்தங்கள்: இந்தப் பயணத்தின்போது பிரான்ஸிடம் இருந்து கடற்படைப் பயன்பாட்டுக்கான 26 ரஃபேல் விமானங்களும், கூடுதலாக 3 ஸ்கார்பியன் நீர்முழ்கிக் கப்பல்களை வாங்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது சுமார் ரூ.90,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தமாகும். பிரான்ஸ் பற்றி தலைவர் - இம்மானுவேல் மேக்ரான் பிரதமர் - எலிசபெத் போர்ன் தலைநகரம் - பாரிஸ் நாணயம் - (பிரெஞ்சு) பிராங்க் பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் பணிபுரியும் மகளிருக்கு அரசு விடுதி பணிபுரியும் பெண்களுக்காக தமிழக அரசு பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. ”தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்” என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்குதல், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடையாறு, சாஸ்திரி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார். இந்த விடுதியில் 98 படுக்கை வசதியுடன் ஒருவர், இருவர், நால்வர், ஆறு பேர் தங்கும் வகையில் அறை வசதிகள் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி, இலவச வைஃபை, பயோமெட்ரிக் பதிவேடு வசதி, பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இந்த விடுதிக்கு http://www.tnwwhcl.in/ என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அரசியல் அறிவியல்

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை  மலேசியாவில் ஹெச்ஏஎல் பிராந்திய அலுவலகம் திறப்பு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் (ஹெச்ஏல்) பிராந்திய அலுவலகத்தை, கோலாலம்பூரில் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அந்த அலுவலகம், இந்தியா-மலேசியா இடையே பாதுகாப்பு தொழில் சார் கூட்டாண்மையை மேலும் நெருக்கமாகக் உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான கூட்டுறவை மேம்படுத்தும் வகையில் 1993-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும், தொழில் துறை ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மலேசியாவிலுள்ள பிரசித்து பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழிபாடு மேற்கொண்டார். மலேசியா பற்றி பிரதமர் – அன்வர் இப்ராகிம் தலைநகரம் – கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதி நாணயம் – மலேசிய ரிங்கட் சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் கால நீட்டிப்பு சட்டவிரோதம்  அமலாக்கத் துறையின் இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2020-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. ஆனால், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு 2020-இல் நீட்டிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டிலும் அவரது பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதை மேலும் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஆண்டு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகை செய்யப்பட்டது. அதனடிப்படையில், அமலாக்கத் துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக் காலமானது 3-ஆவது முறையாக கடந்த ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மத்திய அரசு சீர்கெடுத்து வருவதாகவும் அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. மனுவை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி), மத்திய அரசு, அமலாக்கத் துறை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியது. அப்போது, அமலாக்கத் துறை இயக்குநரின் பதவிக் காலத்தை 3-ஆவது முறையாக நீட்டித்தது சட்டவிரோதமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். அதே வேளையில், அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க வகைசெய்த மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அமலாக்கதுறை இயக்குநரகம் பற்றி நிர்வாக இயக்குனர் – சஞ்சய் குமார் மிஸ்ரா தலைமையகம் –…

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் முதுநிலை மருத்துவப் படிப்பு : அரசு மருத்துவர்களின் பணி 5 ஆண்டுகள் அரசு மருத்துவர் ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்றும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்துவரை எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள இடங்களை 525 இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது. அவர்கள் முதுநிலை படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வேண்டும் என்பது விதி. அரசு நலத்திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கருணாநிதி பெயர் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. அதன் விவரம்: 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நியாயவிலைக் கடைகள்தான் கணக்கெடுப்பின் மையமாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். பொருளாதாரத் தகுதிகள் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்தள்ள குடும்பங்கள். ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியான வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை. விதிவிலக்கு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வி மேம்பாடு : மைக்ரோசாஃபட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளதாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம்…

அரசியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் குழந்தைகள் உதவி எண் 1098 ”ஒரே தேசம் ஒரே உதவி எண்” நோக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் உதவி எண் 1098 அவசரகால பதில் ஆதரவு அமைப்பு 112 உடன் இணைக்கப்படும். ஒருங்கிணைப்பு பணியை C-DAC (கேரளா) மேற்கொள்ளும். குழந்தைகள் உதவி எண் 1098 பற்றி இது ஒரு நாளின் 24 மணி நேரமும், வருடத்தில் 365 நாட்களும், உதவி மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவச, அவசர தொலைபேசி சேவையாகும். CHILDLINE India Foundation (CIF) என்பது உதவி எண் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கான முக்கிய அமைப்பாகும். இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

அரசியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் தமிழக மொத்த வாக்காளர்கள் 6.12 கோடி  வாக்காளர் பட்டியல் காலாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்தார். ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தொடர்ச்சியான தகுதியேற்பு நாள்களில் ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 6.51 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறிப்பு இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு அமைப்பு. பிரிவு 324 – நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம். இந்திய தேர்தல் ஆணையம் 1950 இல் நிறுவப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பார். அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர். இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். ”தேர்தல் ஆணையர் திருத்தச் சட்டம், 1989” ஜனவரி 1, 1990 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசு-நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு தலசீமியா நோயாளிகளக்கு முதல்வர் காப்பீட்டில் எலும்பு மாற்று சிகிச்சை தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 165 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை. தலசீமியா என்பது ஒரு மரபணு ரீதியிலான பாதிப்பாகும். நோய்க்குள்ளான குழந்தைகளின் உடலின் போதுமான ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022) பயன்பெற்று வருகிறார்கள். இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.