அரசியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

தமிழக மொத்த வாக்காளர்கள் 6.12 கோடி 

  • வாக்காளர் பட்டியல் காலாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அறிவித்தார்.
  • ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தொடர்ச்சியான தகுதியேற்பு நாள்களில் ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும்.
  • செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதியில் மொத்தம் 6.51 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
  • தமிழகத்திலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்பு

  • இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு அமைப்பு.
  • பிரிவு 324 – நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம்.
  • இந்திய தேர்தல் ஆணையம் 1950 இல் நிறுவப்பட்டது.
  • இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இருப்பார்.
  • அவருக்கு உதவிட இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பர்.
  • இந்தியத் தலைமை ஆணையர் மற்றும் பிற இரண்டு ஆணையர்களையும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
  • ”தேர்தல் ஆணையர் திருத்தச் சட்டம், 1989” ஜனவரி 1, 1990 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசு-நலன் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

தலசீமியா நோயாளிகளக்கு முதல்வர் காப்பீட்டில் எலும்பு மாற்று சிகிச்சை

  • தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 165 குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை.
  • தலசீமியா என்பது ஒரு மரபணு ரீதியிலான பாதிப்பாகும்.
  • நோய்க்குள்ளான குழந்தைகளின் உடலின் போதுமான ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
  • ஒன்றிய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சுமார் 1.37 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022) பயன்பெற்று வருகிறார்கள்.
  • இத்திட்டத்தில் 1,090 சிகிச்சை முறைகளும் மற்றும் 52 பரிசோதனை முறைகளுக்கும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
  • இத்திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5,00,000/- வரை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
Next அரசியல் >

People also Read