அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

மௌனத்திற்கான உரிமை

  • உச்ச நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மௌனமாக இருக்க உரிமை உண்டு என்றும் புலனாய்வாளர்கள் அவர்களைப் பேசவோ அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ வற்புறுத்த கூடாது என்றும் கூறியுள்ளது.
  • மௌனம் காப்பதற்கான உரிமையானது சட்டப்பிரிவு 20(3)-ல் இருந்து வெளிப்படுகிறது.
  • இது தனக்கு எதிராக தானே சாட்சியாக இருக்குமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று கூறுகிறது.
  • இந்த பாதுகாப்பு கிரிமினல் நடவடிக்கைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது,
  • சுங்கச் வரிச்சட்டம், 1962 மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999, ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படும் நபருக்க இந்த உரிமை இல்லை. 
  • நந்தினி சத்பதி எதிர். பி.எல். டானி வழக்கு, ”காவல் நிலைய எல்லைக்குள் ஒரு நபரை கேள்விக்கு பதிலளிக்க கட்டாயப்படுத்துவது பிரிவ 20(3) ஐ மீறுவதாக இருக்கலாம்” என்ற உச்ச நீதிமன்றம் கூறியது.

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

சாலை விபத்தில் உயிர் காக்க உதவினால் வெகுமதி

  • சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவிபுரிவோருக்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரச வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசால் ஏற்கெனவே வெகுமதியாக வழங்கும் 5,000 ரூபாயுடன், மாநில அரச சார்பில் ரூ.5,000 சேர்த்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதைப் பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காக்க உதவும் வகையில், அவர்களை பொன்னான நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.
  • ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >

People also Read