அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

முதுநிலை மருத்துவப் படிப்பு : அரசு மருத்துவர்களின் பணி 5 ஆண்டுகள்

  • அரசு மருத்துவர் ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் பணியாற்றும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்துவரை எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
  • மாநில ஒதுக்கீட்டுக்கு உள்ள இடங்களை 525 இடங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவர்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது.
  • அவர்கள் முதுநிலை படிப்பை நிறைவு செய்த பிறகு இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வேண்டும் என்பது விதி.

அரசு நலத்திட்டங்கள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு கருணாநிதி பெயர்

  • மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. அதன் விவரம்:
  • 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம். அதாவது, 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • நியாயவிலைக் கடைகள்தான் கணக்கெடுப்பின் மையமாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
  • திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

பொருளாதாரத் தகுதிகள்

  • ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
  • ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கு குறைவாகப் புன்செய் நிலம் வைத்தள்ள குடும்பங்கள்.
  • ஆண்டுக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
  • பொருளாதாரத் தகுதிகளுக்காக தனியான வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
  • விதிவிலக்கு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வி மேம்பாடு : மைக்ரோசாஃபட் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • நாட்டிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளதாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
  • TEALS (Technical Education And Learning Support) எனும் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தமிழகத்தின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் ”வானவில் மன்றம்” திட்டத்தின் வாயிலாக ”ஸ்டெம்” முயற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்டு பிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.
  • இதன் அடுத்த கட்டமாக ரோபோடிக்ஸ், ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ், மெசின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மைக்ரோசாஃபட் நிறுவனத்துடன் இணைந்து சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next அரசியல் அறிவியல் >

People also Read