Tag: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் வாட்ஸ்-ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய திட்டம் கடந்த மே 17- ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகள் தங்கள் கைப்பேசி வாட்ஸ் ஆப் மூலம் 8300086000 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மொழி, புறப்படும் இடம், சேரும் இடம், டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு ஜிபே, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இந்நிலையில், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரத்து 468 பேர் டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MLACDS) செயல்படுத்துவதற்கான நிதி, ஒரு தொகுதிக்கு ஆண்டுக்கு 3 கோடி நிதி ஒதுக்கீட்டில் MLACDS செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குறிப்பு மாநில அரசு ஏப்ரல் 2020ல், எம்எல்ஏசிடிஎஸ்-ன் கீழ் ஒதுக்கீட்டை 32 கோடியாக ஒதுக்கீட்டைக் குறைத்து, எம்எல்ஏசிடிஎஸ் நிதியிலிருந்து 235 கோடியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கு, கோவிட்-19-ஐக் கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும், பொருட்களையும் வாங்குவதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தது. அரசு நலத்திட்டங்கள் “நீடுழி வாழ்க“ திட்டம் நாட்டின் கடைக்கோடி வழ உள்ளவர்களுக்கு அரசின் அனைத்து சுகாதார திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், நீடூழி வாழ்க (ஆயுஷ்மான் பவ) திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சுகாதாரத் திட்டங்களின் பலன்கள் பயனாளிகளை சென்றடையும் வகையில் கிராம அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பிரசாரத்தை கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குழுக்கள் மேற்கொள்ள உள்ளன. இதுமட்டுமின்றி சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் மூலம் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஒழித்தல், ஊட்டச்சத்து, குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், நோய்த்தடுப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த பிரசாரம் உதவும். இந்த பிரசாரத்தின்போது ஒவ்வொரு கிராமத்திலும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் விநியோகிக்கப்படும். அத்துடன் அந்தத் திட்டத்தின் கீழ். அப்பகுதிகளில் உள்ள எந்தெந்த மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன, என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படும் என்பது குறித்த தகவல் வழங்கப்படும். பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் விநியோகம், நோய்த்தடுப்பு, தொற்ற நோய்கள் பரிசோதனை உள்ளிட்டவற்றில் 100 சதவீத இலக்கை அடைவதும் திட்டத்தின் அங்கமாகும்.