அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்

அபராதத் தொகையை நூலகத்துக்கு வழங்க உத்தரவு

  • ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது, மனுதாரருக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது. இதனை விதித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர், ‘தொகையை மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகம் வாங்கப் பயன்படுத்த வேண்டும்.
  • கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்கும் வகையில் தனி வங்கிக் கணக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் தொடங்க வேண்டும். 
  • நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகளில் அபராதம் விதிக்கும்போது, அதனைக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தவேண்டும்’ என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
  • ‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படும்’ என்று சொல்வார்கள். அந்த மூதுரையை, உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் வழியாக நிலைநாட்டியிருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய அரசியல் அமைப்புகள்

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழு மாற்றியமைப்பு

  • மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவை அவையின் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர் மாற்றியமைத்தார்.
  • இந்த மாற்றத்தின்படி பி.டி.உஷா, எஸ்.பங்கோன் கொன்யக், பௌசியா கான், சுலதா டியோ, வி.விஜய்சாய் ரெட்டி, சுன்ஷியாம் திவாரி.எல்.ஹனுமந்தியா, சுகெந்து சேகர் ராய் உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் புதிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • மாநிலங்களவை விதிகளின் படி, அவையில் தலைவர் அல்லது துணைத் தலைவர் இல்லாத நிலையிலும் அவர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதன் அடிப்படையிலும் அவையை தொடர்ந்து வழி நடத்துவதற்காக அவை உறுப்பினர்களிலிருந்து அதிகபட்சம் 6 உறுப்பினர்களைக் கொண்ட இத்தகைய துணைத் தலைவர்கள் குழு, அவைத் தலைவர் சார்பில் அவ்வப்போது அமைக்கப்படுவது நடைமுறை.
  • இது குறித்து ஜகதீப் தன்கர் கூறுகையில், ‘புதிய துணைத் தலைவர்கள் குழுவில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

ராஜ்யசபா பற்றி

  • தலைவர் (இந்திய துணை ஜனாதிபதி) – ஜகதீப் தன்கர்
  • வேறு பெயர்கள் – நிரந்தர அவை/ மாநிலங்கள் அவை/ மேலவை
  • அதிகபட்ச உறுப்பினர் வரம்பு – 250 உறுப்பினர்கள்
  • தற்போதைய எண்ணிக்கை – 245 உறுப்பினர்கள்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் -233
  • குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் – 12 (கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைகளில் அவர்களின் பங்களிப்புக்காக)

பொது விழிப்புணர்வு மற்றும் நிர்வாகம்

பொது சிவில் சட்டம்

  • ”குடும்ப சட்ட சீர்திருத்தங்கள்” குறித்து 2018-இல் 21-ஆவது சட்ட ஆணையம் ஆலோசனைகளை நடத்தியது. ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் அது குறித்த அறிக்கையை சட்ட ஆணையம் சமர்ப்பிக்கவில்லை.
  • இந்நிலையில், தற்போதைய 22-ஆவது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் பொது மக்கள், மத அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு வருகிறது. 
  • பொது சிவில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதியும், பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை கவனத்தில் கொண்டும் புதிய ஆலோசனைகளை 22-ஆவது சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 
  • முன்னதாக பொது சிவில் சட்டம் குறித்து 2018, ஆகஸ்ட் 31-ஆம் தேதி அப்போதைய சட்ட ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி.எஸ்.சௌஹான் அளித்த பரிந்துரை அறிக்கையில், ‘இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும்போது, பின்தங்கிய சமூகத்தினரை தாழ்த்தக் கூடாது. பொது சிவில் சட்டதுக்குப் பதிலாக சட்டங்களில் உள்ள பாகுபாடுகளைச் சரி செய்யலாம். ஆகையால், தற்போதைக்கு பொது சிவில் சட்டம் தேவையானதல்ல; அவசியமில்லை’.

அரசியலமைப்பு பின்னணி

  • பகுதி 4 (DPSP), இந்திய அரசியலமைப்பின் 44வது பிரிவு, “இந்தியாவின் அனைத்து பகுதிகள் முழுவதும் குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அரசு கொண்டுவந்து பாதுகாக்க வேண்டும்.” என கூறுகிறது.

22வது சட்ட ஆணையம்

  • உருவாக்கப்பட்டது – பிப்ரவரி 21, 2020 (3 வருட காலத்திற்கு)
  • குழுவின் தலைவர் – ஓய்வு பெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி
Next அரசியல் அறிவியல் >

People also Read