அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல்

  • கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளர்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
  • மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் எண்மமயமாக்கலை ஊக்குவிக்க, எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை (டிஐஎல்ஆர்எம்பி) மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
  • இதில் சிறப்பாகப் பணியாற்றும் வருவாய், பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ”பூமி சம்மான் விருது” ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
  • இது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். இது பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்படும்போது நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த உதவும்.
  • நிலம் தொடர்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிக்கப்படுவதில்  நன்மைகள்.
  • குறிப்பாக மின்–நீதிமன்றங்களோடு இணைக்கப்படும்போது, நிலம் தொடர்பான தாவாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும்.
  • நாடு முழுவதும் 94 சதவீதம் எண்ம மயமாக்கலை நில வளத் துறை முடித்துள்ளது.
  • இதை 2024 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீன மாயமாக்கல் திட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரசு நிலத்திட்டங்கள்

”நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம்

  • நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி” திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்து இடை நின்ற மாணவர்களில் 15,713 மாணவர்கள் கண்டறியப்பட்டு கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  • இதற்காக நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி திட்டம்” மூன்று கட்டங்களாக நடத்தப் பட்டது.
    • அதில் பள்ளிக் கல்வித் துறையால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலம் பிரிவு முகாம்களுக்குத் திரட்டப்பட்டனர்.
    • சார் ஆட்சியரின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகியோர் முகாம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
    • இந்த முகாம்களில், வங்கிகள் தங்களிடம் உள்ள கல்விக் கடன் திட்டங்களை விளக்கியதுடன் பல்வேறு மாவட்டங்களில் உடனடிக் கடன் வழங்க ஏற்பாடு செய்தனர்.
Next அரசியல் அறிவியல் >

People also Read