Tag: நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல்

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் நில வளங்களை நம்பியிருப்பதால், அந்த மக்களின் வளர்ச்சிக்கு நிலப் பதிவேடுகள் எண்மமயமாக்கல் அடிப்படைத் தேவை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் கணினிமயமாக்கல் மற்றும் எண்மமயமாக்கலை ஊக்குவிக்க, எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தை (டிஐஎல்ஆர்எம்பி) மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதில் சிறப்பாகப் பணியாற்றும் வருவாய், பதிவுத் துறை அதிகாரிகளுக்கு ”பூமி சம்மான் விருது” ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. இது வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும். இது பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைக்கப்படும்போது நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த உதவும். நிலம் தொடர்பான தகவல்களை இலவசமாகவும், எளிதாகவும் அளிக்கப்படுவதில்  நன்மைகள். குறிப்பாக மின்–நீதிமன்றங்களோடு இணைக்கப்படும்போது, நிலம் தொடர்பான தாவாக்கல் துரிதப்படுத்தப்படுவதோடு, சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும். நாடு முழுவதும் 94 சதவீதம் எண்ம மயமாக்கலை நில வளத் துறை முடித்துள்ளது. இதை 2024 மார்ச் 31-ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ம இந்தியா (டிஜிட்டல்) நில ஆவணங்கள் நவீன மாயமாக்கல் திட்டத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் 100 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நிலத்திட்டங்கள் ”நான் முதல்வன் – உயர்வுக்குப் படி” திட்டம் நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி” திட்டத்தின் கீழ் பிளஸ் 2 முடித்து இடை நின்ற மாணவர்களில் 15,713 மாணவர்கள் கண்டறியப்பட்டு கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்காக நான் முதல்வன் – ”உயர்வுக்குப் படி திட்டம்” மூன்று கட்டங்களாக நடத்தப் பட்டது. அதில் பள்ளிக் கல்வித் துறையால் அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலம் பிரிவு முகாம்களுக்குத் திரட்டப்பட்டனர். சார் ஆட்சியரின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆகியோர் முகாம் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தனர். இந்த முகாம்களில், வங்கிகள் தங்களிடம் உள்ள கல்விக் கடன் திட்டங்களை விளக்கியதுடன் பல்வேறு மாவட்டங்களில் உடனடிக் கடன் வழங்க ஏற்பாடு செய்தனர்.