அரசியல் அறிவியல்

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள்

பாராளுமன்றத்தில் இருந்து எம்பி பதவிநீக்கம்

  • திரிணாமுல் காங்கிரஸின் எம்பி மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார்.
  • மக்களவை  நெறிமுறைக் குழு “நெறிமுறையற்ற நடத்தை” மற்றும் “சபையை அவமதித்ததற்காக” அவரை  எம்.பி.பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைத்தது.

நெறிமுறைகள் குழு

  • மக்களவை
  • உருவாக்கம்  – 2000
  • உறுப்பினர்கள் 15 (மக்களவையில் இருந்து)
  • பரிந்துரை  – சபாநாயகர்
  • மாநிலங்களவை
  • உருவாக்கம் – 1997
  • உறுப்பினர்கள் 10 (மாநிலங்களவையில் இருந்து)
  • பரிந்துரை – மாநிலங்களவை தலைவர்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

பேக்கேஜிங்கில் சணலின்  உபயோகம்

  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023 -24 ஆம் ஆண்டிற்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாக உபயோகப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டு விதிமுறைகளுக்கு அன்று ஒப்புதல் அளித்தது.
  • 2023-24 ஆம் ஆண்டிற்கான கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகள் உணவு தானியங்களில் 100% முழுமையாகவும் மற்றும் சர்க்கரையில் 20% கட்டாயமாக சணல் பைகளில் பேக்கிங் செய்ய வழிவகுக்கிறது.
  • தற்போதைய முன்மொழிவில் உள்ள ஒதுக்கீடு விதிமுறைகள் இந்தியாவில் சணல் மூலப்பொருட்கள் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை மேலும் பாதுகாக்கும்.
Next அரசியல் அறிவியல் >

People also Read