Tag: வெளிநாட்டில் இருந்து உடல்களை கொண்டு வர e-clearance portal

அரசியல் அறிவியல்

பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் மருந்து நிறுவனங்களின் சான்றிதழுக்கான காலக்கெடு இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் வணிகத்தை வளர்க்க உதவும் சிறந்த தர நிர்வாகத்தை கொண்டு வர, சுகாதார அமைச்சகம் சிறு உற்பத்தியாளர்களுக்கு ஆறு மாதங்களும், பெரிய நிறுவனங்களுக்கு 12 மாதங்களும் உலக சுகாதார அமைப்பு-நல் உற்பத்தி நடைமுறைகள் (WHO-GMP) சான்றிதழ் பெறுவதற்கு அவகாசம் அளித்துள்ளது. மருந்து பொருட்கள், உற்பத்தி முறைகள், இயந்திரங்கள், செயல்முறைகள், பணியாளர்கள் மற்றும் வசதி அல்லது சூழல் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தி தரத்தை கொண்டு வரும் கட்டாயத் தர நிர்ணய கொள்கைகளை GMP கொண்டுள்ளது. குறிப்பு GMP அமைப்பு முதன்முதலில் 1988-ல் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள். 1945-ன் அட்டவணை M-ல் இணைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து உடல்களை கொண்டு வர e-clearance portal உடல்களை எடுத்துச் செல்வதில் தாமதத்தைத் தவிர்க்க, சுகாதார அமைச்சகம் மின்-அனுமதி இணைய முகப்பினை (e-clearance portal) தொடங்குவதாக அறிவித்தது. இதன்படி டெல்லி விமான நிலையம் நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் நோடல் மையமாக செயல்படுவதுடன், இச்செயல்முறைக்கு 48 மணிநேரத்தில் ஒப்புதலை வழங்கும். இது பொதுமக்களுக்கு, சர்வதேச எல்லைகள் வழியாக, மனித உடல்களை எளிதாகவும் சரியான நேரத்திலும் கொண்டு செல்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.