Tag: அவற்றின் பயன்பாடுகள்

அரசியல் அறிவியல்

சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் நியாயமற்ற பாலின சொற்றொடர் கையேடு: உச்சநீதிமன்றம் வெளியீடு நியாயமற்ற பாலின வார்த்தைகள் மற்றும் அதற்கான மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் அடங்கிய கையேட்டை உச்சநீதிமன்றம் வெளியிட்டது. வழக்கு விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளில் பெண்கள் குறித்த ஒரே மாதிரியான சொற்றொடர்களை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும் நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு இந்தக் கையேடு உதவும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார். இதன் மூலமாக, மனுக்கள், நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து சட்ட ஆவணங்களிலும் இந்த மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர் பயன்பாடு நடைமுறைக்கு வரும். நியாயமான, சமத்துவ தீர்ப்பை நீதிபதிகள் எழுதுவதை இந்தக்கையேடு உறுதிப்படுத்தும். முக்கிய அம்சங்கள் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளுக்குப் பதிலாக 'பெண்' என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தவேண்டும். ஏற்கெனவே உள்ள சர்ச்சை வார்த்தைகளுக்கு பதிலாக "பாலியல் தொழிலாளர்” என்ற சொற்றொடரையும் திருமண உறவைக் கடந்து ஆணுடன் பாலியல் உறவு கொண்டிருக்கும் பெண் என்ற சொற்றொடரடையும், 'திருமணம் செய்துகொள்ளாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தை' என்ற சொற்றொடரையும் பயன்படுத்த இந்தக் கையேடு பரித்துரைத்துள்ளது.  'ஈவ் டீசிங்' என்ற வார்த்தைக்கு மாற்றாக “தெரு பாலியல் துன்புறுத்தல்“ என்ற சொற்றொடரை பயன்படுத்தவும் இந்தக் கையேடு பரிந்துரைத்துள்ளது. ஆங்கிலத்தில் 'ஹவுஸ் வொய்ஃப்' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'ஹோம் மேக்கர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவும் பரித்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய உச்ச நீதிமன்றம் பற்றி நிறுவப்பட்டது - அக்டோபர் 1, 1937 இந்திய தலைமை நீதிபதி - தனஞ்சய ஒய். சந்திரசூட் மொத்த எண்ணிக்கை - 34 (33+1) அரசியலமைப்பு விதிகள் - சரத்து 124 - 147 மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டம் இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத்திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.20,000 கோடியை வழங்க உள்ளது. இந்தியா முழுவதும் 169 நகரங்களில் அரசு தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசியல் அறிவியல்

மக்கள் கருத்து பொதுப்பெயர் மருந்துகளை பரிந்துரைக்கும் நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் 'சந்தைக்கு வரும் அனைத்து மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை, பொதுப்பெயர் மருந்துகளை (ஜெனரிக் மெடிசின்) மட்டுமே மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும்' என்று மத்திய அரசிடம் இந்திய மருத்துவ சங்கம் (IMA) வலியுறுத்தியுள்ளது. மருத்துவர்களின் தொழில்முறை நடத்தைக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டது. அதில், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பொதுப்பெயர் மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. மீறினால் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவர் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது. பொதுப்பெயர் மருந்துகளின் தரம் குறித்து நிச்சயமற்றதன்மை நிலவுவதே, அவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில் மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது.  மத்திய அரசாங்கம்-பொதுநலம் சார்நத அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள் “விடியல் பயணம்“  திட்டம் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் இனிமேல் “விடியல் பயணம்“ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்தத் திட்டத்தால் ஒவ்வொருவரும் மாதம் ரூ.850-க்கு மேல் சேமிக்க முடிவதாக பெண்கள் கூறுகிறார்கள்.  பெண்களுக்குப் பொருளாதார விடியலை அளித்ததன் அடையாளமாக, கட்டணமில்லாத பேருந்து பயணத் திட்டம் இனி “விடியல் பயணம்“ என்று அழைக்கப்படும்.