Tag: சைபர் குற்றங்களுக்கு எதிராக எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும்

வரலாறு

முக்கிய தினங்கள் கல்வி வளர்ச்சி நாள் – ஜுலை 15 தமிழகத்தில் கல்வியறிவின்மையை நீக்கும் நோக்கில், முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் பிறந்த நாளான ஜுலை 15-ஆம் தேதி, ”கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. உலக அமைப்புகள் சைபர் குற்றங்களுக்கு எதிராக எல்லைகளைக் கடந்து செயல்பட வேண்டும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ), மெட்டாவெர்ஸ் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப காலத்தில் நிகழும் குற்றங்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஜி20 நாடுகளின் கூட்டம் ஹரியானாவின் குருகிராமில் நடைபெற்றது. எண்ம முறையிலான அடையாளப்படுத்தலுக்காக ஆதார், நிகழ் நேரத்தில் விரைவான பணப்பரிமாற்றத்துக்காக யுபிஐ உள்ளிட்ட எண்ம உள்கட்டமைப்புகள் இதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கான அமைப்பு (சிசிடிஎன்எஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றத்துக்கு எதிராக இந்திய சைபர்-குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை (ஐ4சி) மத்திய அரசு நிறுவியுள்ளது. புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் புத்தக வெளியீடு தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ”பல்லுயிர் மற்றும் சதுப்புநிலச் சூழலின் முக்கியத்துவம்” என்ற புத்தகத்தையும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். தற்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என 3 மொழிகளில் புத்தகத்தை வெளியிட்டுள்ளோம். விரைவில் மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க உள்ளோம் என்றார் அவர். விருதுகள் மற்றும் கௌரவங்கள் பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருது பிரான்ஸில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்கி அதிபர் இமானுவல் மேக்ரான் கௌரவித்தார். பாரீஸில் உள்ள எலைசி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு பிரான்ஸின் உயரிய விருதான ”கிராண்ட்கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானார்” விருது வழங்கப்பட்டது. பிரான்ஸின் இந்த உயரிய விருதைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டோலா, பிரிட்டன் அரசர் சார்லஸ், ஜெர்மனி முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்கெல், ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் போட்ரஸ் காலி உள்ளிட்டோர் அந்த உயரிய விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர். குறிப்பு பிரதமர் மோடிக்குக் கடந்த மாதத்தில் எகிப்தின் உயரிய விருது வழங்கப்பட்டிருந்தது. பப்புவா நியூ கினியா, ஃபிஜி, அமெரிக்கா, பூடான், பஹ்ரைன், மாலத்தீவுகள், ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளையும் பிரதமர் மோடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.