வரலாறு

பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்

பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

  • தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • ‘பிரளய்’ ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (DRDO) உருவாக்கியது.
  • இந்த குறுகிய தொலைவு ஏவுகணையானது 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள வெடி குண்டுகளைச் சுமந்தவாறு பறந்து 350 கி.மீ. முதல் 500 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
  • ஒடிஸா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில், அந்த ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • இந்த சோதனையின்போது அனைத்து குறிக்கோள்களையும் ஏவுகணை பூர்த்தி செய்தது. நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

ரோகிணி நய்யார் பரிசு

  • கிராமப்புற மேம்பாட்டிற்கான சிறந்தப் பங்களிப்பிற்காக சமூக சேவகர் தீனநாத் ராஜ்புத்திற்கு ரோகிணி நய்யார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்பினை (FPO) நிறுவியதன் மூலம் சத்தீஸ்கரில் உள்ள 6,000 பழங்குடியினப் பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  
  • முதல் விருதாளர்  – செத்ரிசெம் சங்டம் (2022)
Next வரலாறு >

People also Read