Tag: ஔவையார் விருது:

வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள் மகளிர் நலன்: ஆட்சியர்களுக்கு விருது பெண் குழந்தைகள், மகளிர் நலன் பாதுகாப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக, திருவள்ளுர் மாவட்டத்துக்கு முதல் பரிசு அளிக்கப்பட்டது. ஔவையார் விருது: இலக்கியம் சமூகப் பணிகளில் சிறந்து விளங்குவதற்காக, நீலகிரி மாவட்டத்தைச்  சேர்ந்த கமலம் சின்னசாமிக்கு ஔவையார் விருது அளிக்கப்பட்டது. 90 வயதாகும் அவர், 43 நுால்களை எழுதியுள்ளார்.  பாராட்டுச் சான்றிதழ் எட்டு கிராம் தங்கப் பதக்கம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதேபோன்று, சேலத்தைச் சேர்ந்த இளம்பிறைக்கு பெண் குழந்தை விருது அளிக்கப்பட்டது.  அடுக்குமாடி குடியிருப்புகளின் மின்துாக்கி பழுதானபோது, அதை சரி செய்ய அறிவியல்  ஆர்வம் காரணமாக புது கருவியை கண்டுபிடித்ததற்காக இவ்விருதை முதல்வர் அளித்தார்.  இந்த விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்றிதழ் அடங்கியது.