வரலாறு

முக்கிய தினங்கள்

தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம் – டிசம்பர் 2

  • டிசம்பர் 2, 1984 அன்று போபால் விஷவாயு விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அசுத்தமான நீர், நிலம் மற்றும் காற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு  “சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கிரகத்திற்கான நிலையான வளர்ச்சி” என்பதாகும்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

சாகித்ய அகாடமி விருது 2024

  • 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் நீர்வழிப் படூஉம் நாவலுக்காக எழுத்தாளர் தேவிபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவரது இயற்பெயர் ராஜசேகரன் ஆகும்.

நியமனங்கள்

ராஜஸ்தான் புதிய முதல்வர்

  • ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தியா குமாரி  மற்றும் பிரேம்சந்த் பைரவா  ஆகிய இருவரும் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உலக உச்சி மாநாடுகள் மற்றும் அமைப்புகள்

உலகளாவிய AI உச்சி மாநாடு

  • செயற்கை நுண்ணறிவுக்கான வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை (GPAI) உச்சிமாநாடு புது தில்லியின் பாரத் மண்டபத்தில் தொடங்கப்பட்டது, இதில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுச்  சவால்கள் போன்ற AI சிக்கல்கள் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன.
  • 2024 இல், GPAI குழுமத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது.
Next Current Affairs வரலாறு >

People also Read