வரலாறு

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருது 2023

  • ‘உள்ளூர் ஆதாரங்களுக்கான சிறந்த – கைவினை மற்றும் உணவு’ பிரிவில் நிலையான மற்றும் பெண்களை உள்ளடக்கிய முன்முயற்சிகளை ஊக்குவித்ததற்காக 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பொறுப்பு சுற்றுலா விருதை கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் வென்றுள்ளது.
  • பெண்கள் தலைமையிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) சுற்றுலா நடவடிக்கைகளுடன் இணைத்ததற்காகவும், உள்நாட்டு தயாரிப்புகளின் பயனுள்ள சந்தைப்படுத்துதலை உறுதி செய்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருது பொறுப்பு சுற்றுலா கூட்டாண்மை மற்றும் சர்வதேச பொறுப்பு சுற்றுலா மையத்தால் (ICRT) நிறுவப்பட்டது.
  • கேரள பொறுப்பு சுற்றுலா இயக்கம் இவ்விருதைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
  • கேரளாவின் Water STREET திட்டம் 2022ல் இவ்விருதை வென்றது.

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

IPMDA முன்முயற்சியைத் தொடங்கியது குவாட்

  • குவாட் குழுமம் இந்தோ – பசிபிக் கடல்சார் பிராந்திய  விழிப்புணர்வு (IPMDA) முன்முயற்சியைத் தொடங்கியது.
  • இந்த முயற்சியானது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு விரிவான அமைப்பை நிறுவ முயல்கிறது.
  • இந்தோ-பசிபிக் கடல்சார் நடவடிக்கையானது, முக்கியமான கடல் வழித் தொடர்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் பிராந்தியத்தில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும்.

குவாட் பற்றி

  • தொடக்கம் – 2017
  • குறிக்கோள் – இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தையை எதிர்கொள்வதாகும்.
  • உறுப்பினர்கள் – ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா
  • Quad Plus கூடுதல் உறுப்பினர்கள் – நியூசிலாந்து, தென் கொரியா மற்றும் வியட்நாம்.

நியமனங்கள்

புதிய தலைமை தகவல் ஆணையர் நியமனம்

  • தகவல் ஆணையர் ஹீராலால் சமரியாவுக்கு, தலைமை தகவல் ஆணையராக (CIC) ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • இப்பதவிக்கு வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் இவர்தான்.

மத்திய தகவல் ஆணையம் (CIC) பற்றி

  • 2005 இல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்
Next வரலாறு >

People also Read