வரலாறு

முக்கிய தினங்கள்

கார்கில் விஜய் திவாஸ் – ஜூலை 26

  • ஆபரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பெருமையையும் வீரத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.
  • 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ஆயுதப்படையின் வெற்றியை இந்தநாள் நினைவுகூறுகிறது.

விளையாட்டு

ஒலிம்பிக் தீபம் அறிமுகம்

  • 2004 பாரீஸ் ஒலிம்பிக்ஸில் தீபத்தை எந்திச் செல்வதற்கான ‘டார்ச் அறிமுகம் செய்யப்பட்டது. வெள்ளி நிறத்திலான இந்த டார்ச்சின் எடை 1.5 கிலோ கிராம். உயரம்70 சென்டிமீட்டர்.
  • போட்டிக்காக 2,000 டார்ச்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்ட உருக்கில் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • பிரான்ஸை சேர்ந்த மேத்யூ லெஹானியுர் இந்த டார்ச்சை வடிவமைத்திருக்கிறார். ஒலிம்பிக், பாராலிம்பிக் என இரு போட்டிகளிலுமே இந்த டார்ச் பயன்படுத்தப்படும்.

புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்

கருணாநிதி சாகித்திய அகாதெமி நூல்

  • சாகித்திய அகாதெமியின் வெளியீடான, “இந்திய இலக்கியச் சிற்பிகள்-கலைஞர் மு.கருணாநிதி“ நூல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது. 
  • இதை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் நேரில் அளித்தார்.
Next வரலாறு >

People also Read