விளையாட்டு
IBSA உலக விளையாட்டுப் போட்டி 2023
- IBSA (International Blind Sports Federation) உலக விளையாட்டுப்போட்டி 2023 இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றது.
- பார்வைக் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களின் உலகின் மாபெரும் சந்திப்பு.
- இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
- பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய ஆண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
குறிப்பு
- IBSA உலக விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் பார்வையற்றோர் அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்
‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ புத்தகம் வெளியீடு
- ஜூன் 2020 முதல் மே 2022 வரை பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகள் மற்றும் சொற்பொழிவுகள் அடங்கிய இரண்டு தொகுதி புத்தகம் போபாலில் வெளியிடப்பட்டது.
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வெளியீடு பிரிவால் தொகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பு
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் (I&B) – அனுராக் தாக்கூர்.
நியமனங்கள்
காசிரங்கா தேசிய பூங்காவின் முதல் பெண் கள இயக்குனர்
- அசாம் அரசின் இந்திய வன சேவை அதிகாரி சோனாலி கோஷ் பூங்காவின் அடுத்த கள இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
- காசிரங்கா தேசியப் பூங்காவின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசிரங்கா தேசிய பூங்கா பற்றி
- அமைவிடம் – அசாம்
- நிறுவப்பட்டது – 1904
- யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் – 1985
- இந்த பூங்காவில் உலகில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இந்திய காண்டாமிருகங்கள் உள்ளன.