அரசியல் அறிவியல்

மத்திய அரசாங்கம் – பொதுநலம் சார்ந்த அரசு திட்டங்கள், அவற்றின் பயன்பாடுகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

  • நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 31,000 அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 17 லட்சம் மாணவர்கள் பயனடையயிருக்கின்றனர்.

திட்டம் பற்றி

  • தொடங்கப்பட்டது – செப்டம்பர் 15, 2022 மதுரை
  • குறிக்கோள் – அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்குதல்
  • நோக்கம் – பசியைக் குறைத்தல், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பது, குழந்தைகளின் சராசரி உயரத்தை அடைதல், இளம் பருவத்தினரின் எடை குறைவதைத் தடுப்பது, இரத்த சோகை மற்றும் வைட்டமின் பி12 குறைபாட்டைத் தடுப்பது

தமிழ்நாட்டில் காலை உணவுத் திட்டத்தின் பரிணாமம்

  • செப்டம்பர் 16, 1920சர் பி.டி. தியாகராயர் (மெட்ராஸ் மாநகராட்சி மேயர்) – ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு திட்டம்.
  • 1957K.காமராஜர் – மதிய உணவுத் திட்டம் புத்துயிர் பெற்றது.
  • 1982M.G.ராமச்சந்திரன் – சத்துணவுத் திட்டம்.
  • 1989மு. கருணாநிதி – சத்துணவுடன் முட்டை பரிமாறப்பட்டது.
  • 2013 ஜெ ஜெயலலிதா கலவை சோற்றினை உணவுப் பட்டியலில் சேர்த்தார்.
  • 2022மு.க.ஸ்டாலின் – முதலமைச்சர் இலவச காலை உணவுத் திட்டம். 
Next அரசியல் அறிவியல் >

People also Read