வரலாறு

உலக அமைப்புகள் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: தில்லியில் தொடக்கம் உலக பொருளாதார சரிவு, பன்முக ஒத்துழைப்பு, எரிசக்தி பாதுகாப்பு

  • ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
  • இந்தியாவின் அழைப்பை ஏற்று, கூட்டமைப்பில் உறுப்பினர்களாக அல்லாத இலங்கை, வங்கதேச நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் விருந்தினர்களாக இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
  • உலக பொருளாதார சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம், உணவு-எரிபொருள்-உரம் ஆகியவற்றின் விலை பன்மடங்கு அதிகரித்து வருவது, சரக்கு மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்து வருவது உள்ளிட்ட விவகாரங்களுக்கு.
  • பன்முக ஒத்துழைப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவை குறித்து,
  • ஜி20 தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இந்தியா, அக்கூட்டமைப்பின் பல்வேறு மாநாடுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. 

G20

    • பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பு
    • தொடக்கம் – 1999
    • 18 வது மாநாடு – புதுடெல்லி
  • கருப்பொருள்: – வாசுதேவ குடும்பம்
  • ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்

நிதி மோசடியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வழிமுறைகளை வலுப்படுத்த ஜி20 ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியா முடிவு

  • வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிதி மோசடியாளர்கள் சட்டவிரோதமாக திரட்டிய சொத்துகளை விரைந்து பறிமுதல் செய்வதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம், தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கான கட்டாயம் மோசடியாளர்களுக்கு ஏற்படும் என்று ஜி20 கூட்டமைப்பின் ஊழல் எதிர்ப்பு கூட்டத்தில் இந்தியா தெரிவித்தது.
  • ஹரியானா மாநிலம் குருகிராமில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் ஊழல் எதிர்ப்பு பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
Next வரலாறு >

People also Read