வரலாறு

சிறந்த நபர்கள்

பனகல் அரசர் வழி நடப்போம்

  • நீதிக் கட்சி தலைவர்களில் ஒருவரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான பனகல் அரசரின் வழி நடப்போம், தமிழகத்தை முன்னேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
  • திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்குபவர் பனகல் அரசர். அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சம்ஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற பரட்சிகரத்திட்டங்களை நிகழ்த்தி காட்டியவர் அவர்.
  • பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது.

பனகல் ராஜா பற்றி

  • பனகல் ராஜா என்று அழைக்கப்படும் ராஜா சர் பனகண்டி ராமராயனிங்கர், காளஹஸ்தியின் ஜமீன்தாராக இருந்தார்.
  • திராவிட அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக இருந்த நீதிக்கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார்.
  • அவர் ஜனநாயகத்தின் முக்கிய தலைவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளிப்பதில் தீவிர ஆதரவாளராகவும் கருதப்பட்டார்.
  • பனகல் ராஜா 1921 முதல் 1926 வரை மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தார்.
  • அவர் 1925 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 16, 1928 இல் இறக்கும் வரை நீதிக்கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.
Next வரலாறு >

People also Read