வரலாறு

விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதல்

  • அஸர்பைஜானில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
  • இந்தியாவின் சிவா நர்வால், ஈஷா சிங் கூட்டணி இறுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தது.

உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் 

  • ஜோர்டானில் நடைபெறும் உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை அன்டிம் பங்கால் 53 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
  • உலக சாம்பியன்ஷிப்பில் அடுத்தடுத்து இருமுறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
  • 62 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் சவிதா நுட்பமான தாக்குதல் முன்னிலை அடிப்படையில் வெனிசூலாவின் பாவ்லா மான்டெரோவை சாய்த்து தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் ஆனார். 
  • போட்டியில் மொத்தமாக இந்தியா, 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்கள் பெற்றது.

குறிப்பு

  • கடந்த எடிஷனில் அன்டிம் பங்கால் தங்கம் வென்றதன் மூலம், உலக ஜூனியர்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next வரலாறு >

People also Read